“உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!” – மாளவிகா மோகனன்

“உடல்ரீதியாக நான் இந்த அளவுக்கு சவாலை எதிர்கொண்டதில்லை!” – மாளவிகா மோகனன்

பிர​பாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்​படம், தெலுங்​கு, தமிழ், இந்​தி​யில் ஜனவரி 9-ந்தேதி வெளி​யானது. இப்படத்தில் மாளவிகா மோக​னன், நிதி அகர்​வால், ரித்திகுமார் என பலர் நடித்​துள்​ளனர். இப்படம் எதிர்​பார்த்த வெற்​றியை பெற​வில்​லை.

இப்​படம் ஓடிடி-​யில் வெளி​யான பிறகு ஊடகங்​களில் ட்ரோலிங்கை எதிர்​கொண்டு வரு​கிறது. அதில் சண்​டைக் காட்​சிகளில் டூப்​களைப் பயன்​படுத்​தி​ய​தாக விமர்​சனம் எழுந்​தது. படத்​தில் மாளவிகா மோக​னன் போல உடையணிந்த ஸ்டன்ட் நடிகரின் புகைப்​படம் வைரலான​தால், அவரும் டூப்பை பயன்படுத்​தி​ய​தாகக் கூறப்​பட்​டது. இதற்கு பதிலளித்​துள்ள மாளவிகா மோக​னன்,

‘படத்​தில் தனக்​கான ஆக் ஷன் காட்​சிகளை தானே செய்​த​தாகத் தெளிவுபடுத்​தி​யுள்​ளார். தொழில்​முறை ஸ்டன்ட் கலைஞர்​கள் ஒத்​தி​கைக்​காகவோ அல்​லது ஆபத்​தான காட்​சிகளுக்​காகவோ மட்​டுமே இருக்​கிறார்​கள்’ என்றார். மேலும், கயிறு உதவி​யுடன் சண்டைக்​காட்​சிகளில் தான் ஈடு​பட்ட வீடியோக்​களை பகிர்ந்​துள்​ளார்.

அதில் அவர், ‘த ராஜா சாப்’ படத்​தில் அனைத்து ஸ்டன்ட்​களை​யும் நானே செய்தேன். நான் ஆக்‌ஷனை மிக​வும் ரசிக்​கிறேன். உடல் ரீதியாக கடும் சவாலை எதிர்​கொள்​வதும் புதிய விஷ​யங்​களைக் கற்​றுக்​கொள்​வதும் எனக்கு மகிழ்ச்​சியைத் தருகிறது. ஹீரோக்​கள் தாங்​களாகவே ஆக்‌ஷன் காட்​சிகளைச் செய்​தா​லும் படப்பிடிப்பு தளத்​தில் எப்போதும் ஒரு டூப் இருப்​பார். அவர்​கள் நிபுணர்​கள் என்​ப​தால், நடிகர்​களு​டன் இறுதி ஷாட்டை எடுப்​ப​தற்கு முன்​பு, ஆக்‌ஷன் இயக்​குநர் அவர்களுடன் ஒத்​திகை பார்ப்​பது வழக்​கம். அல்​லது சில ஷாட்கள் நடிகர்​களால் செய்ய முடி​யாத அளவுக்கு ஆபத்​தானவை என்று நினைக்​கும் போது, அதை அவர்​கள் செய்​வார்​கள்’ என தெரி​வித்​துள்​ளார்.

“I’ve never faced such a challenge physically!” – Malavika Mohanan
dinesh kumar

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்துக்கு வந்த புதிய சிக்கல் – ரூ.200 கோடியிலிருந்து ரூ.30 கோடியாக குறைந்த ஓடிடி மதிப்பு?

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யாஷ், நயன்தாரா, கியாரா அத்வானி, ருக்மிணி வசந்த், ஹூமா குரேஷி, தாரா சுதாரியா உள்ளிட்டோர் நடிப்பில்…

5 hours ago

‘பில்லா-2’ படத்தை இயக்காதது ஏன்? முதன்முறையாக மனம் திறந்த இயக்குநர் விஷ்ணு வர்தன்!

அஜித் குமார் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பில்லா’ திரைப்படத்தை இயக்கியதன் மூலம் தமிழ் சினிமாவில்…

5 hours ago

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ படத்தில் சீமான்!

‘தாய் கிழவி’ படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுதி இயக்கும் புதிய திரைப்படம் ‘சேயோன்’. சிவகார்த்திகேயன்…

5 hours ago

‘ஏஜிஎஸ் 29’ திரைப்படம் பூஜையுடன் தொடக்கம் – ஆக்‌ஷன் திரில்லருடன் காமெடி கலந்த புதிய படம்!

‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தனது அடுத்த படைப்பான ‘ஏஜிஎஸ் 29’ திரைப்படத்தை பூஜையுடன் தொடங்கியுள்ளது.…

5 hours ago

‘மொத ராத்திரி’ படக்குழுவை நேரில் அழைத்துப் பாராட்டிய நடிகர் தனுஷ்!

அறிமுக இயக்குநர் ராஜா கருப்பசாமி எழுதி இயக்கியுள்ள திரைப்படம் ‘மொத ராத்திரி’. இப்படத்தில் ரிஷிகாந்த், அனிஷ்மா அனில்குமார், சேத்தன், ஏ.…

5 hours ago

Enna Vilai Official Trailer

Enna Vilai Official Trailer | Karunaas | Nimisha | Sam CS | Sajeev Pazhoor

23 hours ago