master teaser release date
நடிகர் விஜய், விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் இப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி வில்லனாகவும், விஜய் கல்லூரி பேராசிரியராகவும் நடித்துள்ளார்கள்.
மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமண் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இப்படம் கொரோனா ஊரடங்கு காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டதால் திட்டமிட்டபடி ரிலீசாகவில்லை.
கடந்த 7 மாதங்களாக மூடப்பட்டிருந்த தியேட்டர்கள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. தற்போது 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் மாஸ்டர் படம் வெளியாக வாய்ப்பில்லை என்றே கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், தீபாவளிக்கு மாஸ்டர் படத்தின் டீசர் வெளியாகலாம் என சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. நீண்ட நாட்களாக மாஸ்டர் படம் குறித்த அப்டேட் எதுவும் வெளியாக வில்லை. இதனால் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் இந்த தீபாவளிக்கு டீசரை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
பொங்கலுக்குள் தியேட்டர்கள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதிக்கப்படலாம் என்பதால் மாஸ்டர் படத்தை அப்போது வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…
அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…
விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…
தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…