Major update from the next film of ‘Yaathisai’ director
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘யாத்திசை’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இயக்குநர் தரணி ராசேந்திரன் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் ஜே. கமலகண்ணன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் தலைப்பு அறிவிக்கப்படவில்லை.
இந்தப் படத்தில் நடிகரும் இயக்குநருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரியாக வலுவான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, கிஷோர், சேயோன், பவானி ஸ்ரீ, ஷிவதா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதோடு, நடிகர் அசோக் செல்வன் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.
பிரிட்டிஷ் ஆட்சி காலத்தை பின்னணியாகக் கொண்டு உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், தற்போது இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. பிரம்மாண்டமான VFX காட்சிகள் மூலம் படத்தின் காட்சித் தரத்தை மேலும் உயர்த்த படக்குழு தீவிரமாக பணியாற்றி வருகிறது.
சேது முருகவேல் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு சார்தக் கல்யாணி இசையமைத்துள்ளார். மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பை கவனித்துள்ளார்.
இந்தப் படத்தின் தலைப்பு, ஃபர்ஸ்ட் லுக், டீசர் உள்ளிட்ட முக்கிய அப்டேட்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது.
Run Official Trailer | In Cinemas On July 10 | Madhavan | Meera Jasmine |…
90 பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில் எஸ்.ஜி. சரவணன் தயாரிப்பில், இயக்குநர் கணேஷ் விநாயகன் இயக்கியுள்ள 'அருள்வான்' திரைப்படத்தின்…
தளபதி விஜய் நடிப்பில், இயக்குநர் சிம்புதேவன் இயக்கத்தில் 2015-ம் ஆண்டு வெளியான 'புலி' திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த…
தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தருக்கு, தற்போது இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர்…
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் அதன் சுற்றுச்சூழல் தாக்கம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு,…
2012-ல் வெளியான “லீலை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகர் ஷிவ் பண்டிட், நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும்…