தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் தற்போது மதராஸி என்ற படத்தில் நடித்து வருகிறார். ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தை ஸ்ரீ லக்ஷ்மி மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
மேலும் ருக்மணி வசந்த், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர், போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில்ஸ் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இருந்தது.
செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி வெளியாக இருக்கும் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


