தெலுங்கு திரையில் வில்லனாக களம் இறங்கினார் கார்த்தி
கைதி-2 படம் எப்போது தொடங்கும் என்பது கேள்விக்குறி ஆகியுள்ளது. இந்நிலையில், கார்த்தி ‘சர்தார் 2’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அடுத்து, தமிழ் இயக்கும் ‘மார்ஷல்’ படத்தில் நடித்து வரும் அவர், நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே தமிழ், தெலுங்கில் உருவான ‘தோழா’ படத்தில் நடித்துள்ள அவருக்குத் தெலுங்கிலும் மார்க்கெட் இருக்கிறது. இந்நிலையில் ‘ஹிட் 4’ என்ற படத்தை இயக்கிய சைலேஷ் கொலனு இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் நடிப்பதாகக் கூறப்பட்டது.
இப்போது, ‘மேட்’ என்ற தெலுங்கு படத்தை இயக்கிய கல்யாண் ஷங்கர் இயக்கும் படத்தில் அவர் நடிக்க இருப்பதாகவும் இப்படத்தை சித்தாரா என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.
சூர்யா, தெலுங்கு இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதையடுத்து கார்த்தியும் தெலுங்கு இயக்குநர்கள் படங்களில் கவனம் செலுத்த இருக்கிறார் என கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.


