Kamal Asked for a change in Vikram story
இந்தியன் 2 படப்பிடிப்பு முடங்கி உள்ளதால் கமல்ஹாசன் அடுத்து விக்ரம் படத்தில் நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர் படங்களை இயக்கி பிரபலமானவர். விக்ரம் படப்பிடிப்பை மே 2-ந்தேதி வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் தொடங்க திட்டமிட்டு உள்ளனர்.
இந்நிலையில், விக்ரம் படத்தின் திரைக்கதை முழுவதையும் படித்த கமல்ஹாசன், அதில் சில மாற்றங்கள் செய்யும்படி தெரிவித்து இருப்பதாகவும், லோகேஷ் கனகராஜும் சில காட்சிகளை மாற்றி எழுதி வருவதாகவும் தகவல் பரவி வருகிறது. இந்த படத்தில் மலையாள நடிகர் பகத் பாசிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். விக்ரம் அதிரடி சண்டை படமாக தயாராகிறது.
இதற்கிடையில் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. அந்த படத்தின் இயக்குனர் ஷங்கர், தெலுங்கு படமொன்றையும், இந்தியில் அந்நியன் ரீமேக் படத்தையும் இயக்க தயாராகி வருகிறார். இந்தியன் 2 படத்தை முடிக்காமல் வேறு படங்களை ஷங்கர் இயக்கக்கூடாது என்று தயாரிப்பு தரப்பில் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
DC Official Trailer | Lokesh Kanagaraj | Sun Pictures | Anirudh | Arun Matheswaran |…
90களிலும் 2000களின் தொடக்க காலத்திலும் KTV-யில் அடிக்கடி ஒளிபரப்பான அம்மன் படங்களை பார்த்த நினைவுகள் இன்னும் பலருக்கும் இருக்கும். அந்த…
நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியிடம் இருந்து விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்…
நடிகர் பிரபுதேவா மற்றும் வடிவேலு இணைந்து நடித்துள்ள புதிய திரைப்படம் ‘பேங் பேங்’ (Bang Bang) ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை…
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகியுள்ள…