Jana Nayagan வழக்கு.. இன்று விசாரணை!
விஜய்யின் கடைசிப் படமாக உருவாகிய ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் மேல்முறையீடு மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தயாரிப்பு நிறுவனம் தரப்பில், சான்றிதழ் வழங்குவது குறித்து இன்னும் முடிவு எடுக்கவில்லை. ஜனவரி 6-ந்தேதியில் சென்சார் போர்டு தலைவர் பிறப்பித்த முடிவையும், தனி நீதிபதி ரத்து செய்துள்ளார்.
ஆனால், தயாரிப்பாளர் அந்த கோரிக்கையையே முன்வைக்கவில்லை. ஒரு படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்துள்ளது.
படத்திற்கு சான்றிதழ் வழங்குவது குறித்து இறுதி முடிவு எடுக்க மும்பையில் உள்ள சென்சார் போர்டுக்குதான் அதிகாரம் இருக்கிறது. சென்சார் போர்டு தலைவரின் முடிவை தயாரிப்பு நிறுவனம் எதிர்க்காமலேயே தனி நீதிபதி அதை ரத்து செய்துள்ளார் என்று தணிக்கை வாரியம் தரப்பில் வாதிடப்பட்டது.
தொடர்ந்து படத் தயாரிப்பு நிறுவனம் வாதிடும்போது, தனி நீதிபதி அனைத்தையும் ஆய்வு செய்துதான் உத்தரவு பிறப்பித்தார் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று காலையிலேயே விசாரணை தொடங்கிய நிலையில், உணவு இடைவேளை முடிந்தும் விசாரணையானது தொடங்கப்பட்டது. ஆனால், மறு ஆய்வுக் குழு அமைக்க 20 நாட்கள் வேண்டும் என்று தணிக்கை வாரியம் கோரி இருக்கிறது.
படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை. வாரிய தலைவரின் உத்தரவு எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை, தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது என்று தயாரிப்பு நிறுவனம் சார்பில் வாதிடப்பட்டது.
டிசம்பர் 29-ந்தேதிக்கு பிறகு சென்சார் போர்டு தகவல்கள் ஆன்லைனில் பதிவு செய்யப்படவில்லை. மறுதணிக்கை என்று எங்களுக்கு கொடுக்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே நீதிமன்றத்தை நாடியதாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து உள்ளது.
வழக்குத் தாக்கல் செய்யப்படாமல் இருந்திருந்தால் படம் மறு ஆய்வு செய்யப்பட்டிருக்கும் என்று தணிக்கை வாரியம் தெரிவித்தது.
விதிகளின்படி படத்தை பார்த்து 2 நாட்களில் சென்சார் சான்று வழங்கி இருக்க வேண்டும்.
டிசம்பர் 18-ந்தேதி தணிக்கை வாரியம் படத்தை பார்த்தது. மேலும் ஆட்சேபனைக்குரிய காட்சிகள் அனைத்தும் டிசம்பர் 25-ந்தேதியே நீக்கப்பட்டு விட்டது என தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது.
படத்திற்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக எந்த தகவலும் தயாரிப்பு நிறுவனத்திற்கு சென்சார் போர்டு தரப்பில் தெரிவிக்கவில்லை. தனி நீதிபதியின் உத்தரவில் எந்த தவறும் இல்லை. வாரிய தலைவரின் உத்தரவு எங்களுக்கு இதுவரை வழங்கப்படவில்லை, தகவல் மட்டுமே தெரிவிக்கப்பட்டது.
சென்சார் தொடர்பான அனைத்தும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்ற விதி மீறப்பட்டுள்ளது. சான்றிதழ் வழங்கும் நடைமுறையில் வெளிப்படை தன்மையை கொண்டு வரவே அனைத்தும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்படுகிறது. ஆனால், இந்த விவகாரத்தில் டிசம்பர் 29-க்கு பிறகு அனைத்தும் மறைக்கப்பட்டது என்று தயாரிப்பு நிறுவனம் வாதிட்டது.
திரைப்படம் எப்போது வெளியாகும் என்று ஓடிடி நிறுவனமான அமேசான் தரப்பில் கேட்கப்படுகிறது. ஒருவேளை அவர்கள் நஷ்ட ஈடு கேட்டால் என்ன செய்வது? ஏற்கனவே ஜனவரி 9-ந்தேதி படம் திட்டமிட்டப்படி வெளியாகததால் பல கோடி நஷ்டம் ஏற்பட்டு இருக்கிறது என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.


