Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

‘ஜெயிலர் 2’ – சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை?

'Jailer 2' - Famous actress who has started shooting for a special song?

‘ஜெயிலர் 2’ – சிறப்பு பாடலுக்கான படப்பிடிப்பை துவங்கிய பிரபல நடிகை?

சூப்பர் ஸ்டார் ரஜினி​காந்த் நடிக்​கும் ‘ஜெயிலர் 2’ படத்தை நெல்​சன் திலீப் ​கு​மார் இயக்கி வரு​கிறார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்​யா, சுராஜ் வெஞ்​சரமுடு, ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, விநாயகன் உள்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கும் இப்படம் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.

இந்​நிலை​யில், இப்படத்தில் இந்தி நடிகை நோரா பதேஹி, ஒரு பாடலுக்கு ஆடுகிறார். ரஜினி​யின் ‘ஜெ​யிலர்’ படத்​தில் தமன்னா ‘காவாலா’ என்ற பாடலுக்கு ஆடி​யிருந்​தார். அந்​தப் பாடல் வைரலானது. இதையடுத்து ‘கூலி’ படத்​தில் பூஜா ஹெக்டே, ‘மோனிகா’ என்ற ​பாடலுக்கு ஆடியிருந்​தார். அந்​தப் பாடலும் ஹிட்​டானது.

இந்​நிலை​யில் ‘ஜெயிலர் 2’ படத்​தில் நோரா பதேஹி இணைந்துள்ளார். அவர் தொடர்​பான பாடல் காட்சி சென்னை அருகே செட் அமைத்து நடந்து வரு​கிறது. 8 நாட்கள் அவருக்​கான படப்​பிடிப்பு இருப்பதாகக் கூறப்​படு​கிறது.

மேலும், ஜெயிலர்-2 படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரும் இணைகின்றனர். விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் வருவதாக கூறப்படுகிறது.

'Jailer 2' - Famous actress who has started shooting for a special song?
‘Jailer 2’ – Famous actress who has started shooting for a special song?