Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

Ilayaraja Symphony concert in Chennai on May 30th

சென்னையில் மே 30-ல் இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சி

மொழிகளுக்கு அப்பாற்பட்டது இசை. வலிகளுக்கு அருமருந்து இசை. அவ்வகையில் காலம் தந்த கொடை ‘இசைச் சித்தர்’ இளையராஜா.

இசை சாம்ராஜ்யம் இளை​ய​ராஜா, ‘வேலியன்ட்’ எனும் தலைப்​பில் உருவாக்கிய தனது முதல் சிம்​பொனி​யின் நேரடி நிகழ்ச்​சியை லண்​டனில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் நடத்​தி​னார். ராயல் பில்​ஹார்​மோனிக் இசைக்​குழு​வுடன் இணைந்து அவர் நடத்​திய இந்த சிம்​பொனி இசை நிகழ்ச்​சிக்​குச் சிறப்பான வரவேற்பு கிடைத்​தது.

இதன் மூலம், ஆசிய கண்​டத்​தில் இருந்து சிம்​பொனி எழுதி அதை அரங்​கேற்​றிய முதல் இசையமைப்பாளர் எனும் சாதனையை, இளை​ய​ராஜா படைத்தார். இந்​நிலையில், சென்னையில் மே 30-ந்தேதி ‘வேலியன்ட்​’ சிம்பொனி இசை நிகழ்ச்​சி நடத்த உள்ளதாக இளையராஜா அறிவித்துள்​ளார். ‘ஃபிரம் ராஜா வித் லவ்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த நிகழ்ச்​சி​யில், சர்​வ​தேச மற்​றும் உள்​நாட்டு இசைக்​கலைஞர்​கள் பங்​கேற்று நேரலையாக இசைக்க உள்​ளனர். இந்​நிகழ்ச்சி நடை​பெறும் இடம் உள்ளிட்ட விவரங்​கள் விரை​வில் அறிவிக்கப்பட இருக்கிறது. இதனை எதிர்பார்த்து இசை ஆர்வலர்கள் ஆவலாய் உள்ளனர். ஆம், இசையால் வசமாகா இதயமெது.!

Ilayaraja Symphony concert in Chennai on May 30th
Ilayaraja Symphony concert in Chennai on May 30th