Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

எல்லா சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நடித்தேன் : ‘யோகிடா’ சாய் தன்ஷிகா பெருமிதம்!

I acted without a dupe in all the fight scenes: 'Yogita' Sai Dhanshika is proud!

எல்லா சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நடித்தேன் : ‘யோகிடா’ சாய் தன்ஷிகா பெருமிதம்!

சாய் தன்​ஷி​கா, முதன்மை கதா​பாத்திரத்​தில் நடித்துள்ள படம் ‘யோகிடா’. இப்படத்தில் ஷாயாஜி ஷிண்​டே, கபீர் துஹான் சிங், எஸ்தர் மற்​றும் பலர் நடித்​துள்​ளனர். கவுதம் கிருஷ்ணா எழுதி இயக்​கி​யுள்​ளார். தீபக் தேவ் இசையமைத்​துள்​ளார். பூபதி ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். பிப்​ரவரி 6-ந்தேதி இப்​படம் வெளியாக இருக்​கிறது.

மோனிகா சினி பிலிம்ஸ் சார்​பில் செந்தில்​கு​மார் தயாரித்துள்ள இப்​படம் பற்​றி, சாய் தன்​ஷிகா தெரிவிக்கையில்,

‘கபாலி படத்​தில் ரஜினி சாரின் மகளாக நடித்​தேன். அதில் என்னுடைய பெயர் யோகி. அப்​படித்​தான் இந்த யோகி டா ஆரம்பித்​தது. இந்த படத்​துக்காக டைட்​டிலை யோசிக்​கும்போது, ‘கபாலி’ படத்​தில் உள்ளது போல ஹேர் ஸ்டைல், ஆக்சன் இந்த படத்​தில் இருந்​தது. அதனால் தான் இந்த டைட்​டில் வைத்தோம். கபாலி படத்​துக்​காக நிஜ​மாகவே முடியை வெட்​டினேன். இந்​தப் படத்​தில் விக் வைத்துள்ளேன்.

இன்று அதிக படங்​கள் வந்து கொண்​டிருக்​கின்​றன. கொரோனா​வுக்கு பிறகு ஓடிடி தளங்​களின் வருகை அதிகரித்துள்​ளது. இந்தப் படத்​தில் ஆக்சன் காட்​சிகள் சிறப்பாக வந்​துள்​ளன. ‘பே​ராண்​மை’ படத்​தில் முதல் முறை​யாக ஆக்சன் காட்​சிகளில் நடித்​தேன். அது​தான் இன்று வரை எனக்கு உதவி வருகிறது. அனைத்து ஆக்சன் காட்​சிகளிலும் டூப் இல்லாமல் நானே நடித்தேன்’என பெருமிதமாய் கூறியுள்ளார்.

I acted without a dupe in all the fight scenes: 'Yogita' Sai Dhanshika is proud!
I acted without a dupe in all the fight scenes: ‘Yogita’ Sai Dhanshika is proud!