Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

டாக்டரான ஐஸ்வர்யா லட்சுமி நடிகையானது எப்படி?

How Did Doctor-Turned-Actress Aishwarya Lekshmi Enter the Film Industry

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘கட்டாகுஸ்தி 2’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக, படத்தில் அவரது கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், மருத்துவப் படிப்பை முடித்த ஐஸ்வர்யா லட்சுமி சினிமாவில் அறிமுகமானது எப்படி என்பது குறித்து இயக்குநர் அலெப்பி அஷ்ரப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:

“ஐஸ்வர்யா லட்சுமி திருவனந்தபுரத்தைச் சேர்ந்த அரசு அதிகாரிகளின் ஒரே மகள். படிப்பில் ஆர்வம் கொண்ட அவர் மருத்துவராக வேண்டும் என்பதே பெற்றோரின் விருப்பமாக இருந்தது. மேலும், அவருக்கு ஒரு மருத்துவரை திருமணம் செய்து வைத்து, குடும்பத்துடன் குழந்தைகளுடன் வாழ வேண்டும் என்பதும் அவர்களின் கனவாக இருந்தது.

ஆனால், எம்.பி.பி.எஸ். படிப்பை முடித்து ஹவுஸ் சர்ஜன்சியில் இருந்தபோதே ஐஸ்வர்யா லட்சுமி மாடலிங் துறையில் நுழைந்தார். தொடர்ந்து சினிமாவிலும் அறிமுகமானார்.

தங்களது மகள் சினிமாவுக்குள் நுழைந்ததை அவரது பெற்றோரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்களது கனவுகள் அனைத்தும் முற்றிலும் தகர்ந்துவிட்டதாக அவர்கள் வேதனைப்பட்டனர்” என தெரிவித்துள்ளார்.