தமிழ் சினிமாவில் வேகமாக முன்னேறி வரும் இளம் நடிகர்களில் ஒருவரான Kavin, தனது புதிய படம் ‘ஹாய்’ மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார். சின்னத்திரையில் ‘கனா காணும் காலங்கள்’ தொடங்கி, ‘சரவணன் மீனாட்சி’ மூலம் பிரபலமான அவர், பின்னர் ‘நட்புனா என்ன தெரியுமா’ படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். Bigg Boss Tamil Season 3 நிகழ்ச்சி அவருக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதன்பின் ‘லிஃப்ட்’ உள்ளிட்ட படங்கள் மூலம் நல்ல வரவேற்பைப் பெற்றார்.
தற்போது இயக்குநர் Vishnu Edavan இயக்கத்தில் உருவாகும் ‘ஹாய்’ படத்தில் கவின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் Nayanthara மற்றும் Sathyaraj முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். வயதில் மூத்த பெண்ணை காதலிக்கும் இளைஞனை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் இப்படம் உருவாகி வருகிறது.
இந்த நிலையில், ‘ஹாய்’ படத்தின் முதல் பாடலான ‘கண்ணங்குழிய’ வரும் 26-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் Rowdy Pictures இணைந்து தயாரிக்கும் இப்படம், மே மாதத்தில் திரையரங்குகளில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Tamil New Year wishes to all 😇#Kannakuzhiya – First single from #HiMovie out on 21st April.
Get ready for the film in theatres from May 2026!@Kavin_m_0431 @VishnuEdavan1 @JenMartinmusic @ZeeStudios_ @Rowdy_Pictures #UmeshKrBansal @girishjohar @kejriwalakshay @TheVinothCj… pic.twitter.com/SMIIpmPTQ0
— Seven Screen Studio (@7screenstudio) April 14, 2026

