Categories: Movie Reviews

ஹீரோ திரை விமர்சனம்

கே.ஜே.ஆர் தயாரிப்பில் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், அர்ஜுன், கல்யாணி ப்ரியதர்ஷன், அபய் டியோல் நடிப்பில் வெளியான திரைப்படம் “ஹீரோ”.

சிவகார்த்திகேயன் தன் பள்ளி படிப்பிலிருந்தே சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்பது கனவாக இருந்தாலும் அதற்கு எந்த முயற்சியும் எடுக்காமல் கடைசியில் போலிச் சான்றிதழ் தயாரித்து விற்கும் சேவையை செய்கிறார் நம் சக்தி (சிவகார்த்திகேயன்). மற்றொரு புறம் ஹீரோ படத்தின் ஹீரோ அர்ஜுன் (சத்தியமூர்த்தி) ஜெண்டில்மேன் படத்தில் அடித்த பணத்தை கொண்டு ஒரு கல்வி நிறுவனம் துவங்கி இலவசமாக கல்வி அளிக்கிறார். (அட்லீ-க்கு போட்டியாக பி.எஸ்.மித்ரன் மாறுவதை தவிர்க்கலாம்) இது படிப்ப வைத்து வியாபாரம் செய்யாமல் படிக்கறவனை வைத்து வியாபாரம் செய்யும் வில்லன் மாகதேவ்-க்கு பிடிக்காமல் போக அதை எப்படி அழிக்க முயன்றார் அதில் சக்தி எப்படி உள்நுழைந்தார், சக்தியும் சத்தியமூர்த்தியும் சேர்ந்து எப்படி வில்லனின் சதியை வீழ்த்தினார்கள் என்பது மீதி கதை.

காதலும் ரோபோ சங்கர் காமெடியும் நிறைய இடங்களில் திணிக்காமல் இருந்தது மிக சிறப்பு. படத்தில் இசை பக்கபலமாக அமைந்தது யுவன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி.

முழு முகத்தையும் மூடிக்கொண்டு போனால் தன் மகனின் உடல் பாவனை வைத்து கண்டுபிடிக்கும் பல அப்பாக்களின் மத்தியில், பாவம் வெறும் கண்களில் மட்டுமே மாஸ்க் அணிந்திருந்த தன் மகன் சக்தியை கண்டுபிடிக்க சற்று தாமதமாகிவிட்டது. சுயமா சிந்திக்கிற ஒவ்வொரும் ஹீரோ தான் சொல்லும் சக்தி, சத்தியமூர்த்தி ஐடியாவை பயன்படுத்துவது நியாயமா.
சூப்பர் ஹீரோவாக காட்டும் காட்சிகள் எந்தவித தாக்கத்தையும் மக்களிடையே ஏற்படுத்தவில்லை. எனினும் சில கருத்துக்கள் ஃபார்வேர்டு மெசேஜ் ஆங்காங்கே உள்ளதால் ஒரு முறைப் பார்க்கலாம்.

சிவகார்த்திகேயன் படத்தில் அர்ஜுன் நடிக்கவில்லை, அர்ஜுன் படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார்.

Rating – 2/5

admin

Recent Posts

‘பாட்ஷா 2, பேட்ட 2’ படங்களில் நடிக்க மறுத்தது ஏன்? – ரஜினிகாந்த் விளக்கம்

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தனது வெற்றிப் படங்களின் இரண்டாம் பாகங்களில் நடிக்க மறுத்ததற்கான காரணத்தையும்,…

56 minutes ago

குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பமில்லை! – நடிகை வரலட்சுமி சரத்குமார்

கடந்த 2024-ஆம் ஆண்டு மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரும் கலைக்கூட உரிமையாளருமான நிக்கோலாய் சச்தேவை நடிகை வரலட்சுமி சரத்குமார் திருமணம் செய்துகொண்டார்.…

1 hour ago

கேரள ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த விஜய் சேதுபதி!

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் அண்மையில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல…

1 hour ago

ரஜினியின் சுயசரிதை விரைவில் வெளியாகும்! – வைரமுத்து தகவல்

நடிகர் ரஜினிகாந்தைச் சந்தித்த கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்து, அவருடன் கலை மற்றும் வாழ்வியல் குறித்து உரையாடியதாகவும், அரசியல் குறித்து பேசவில்லை…

1 hour ago

ராமாயணா முதல் பாகம் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில், நிதேஷ் திவாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணா’ திரைப்படத்தின் முதல் பாகம், வரும் நவம்பர் 5-ம்…

2 hours ago

Naan Ratchasan Lyrical Video

Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…

2 days ago