கேங்கர்ஸ் திரை விமர்சனம்

மைம் கோபி மற்றும் அருள்தாஸ் சகோதரர்கள் ஊர் பெரியவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் நடத்தி வரும் பள்ளியில் மாணவி ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போகிறார். மேலும் பள்ளியில் நடக்கும் குற்ற செயல்களை ஆசிரியை கேத்ரின் தெரசா கமிஷ்னர் அலுவலகத்திற்கு புகார் அனுப்புகிறார். அந்த புகாரின் பேரில் ரகசிய விசாரணை நடத்த போலீஸ் அதிகாரி ஒருவரை காவல்துறை அனுப்புகிறது. இந்நிலையில், உடற்பயிற்சி ஆசிரியராக பள்ளியில் புதிதாக வேலைக்கு சேர்கிறார் சுந்தர்.சி. இவர் வந்தவுடன் பள்ளியில் நடக்கும் பிரச்சனைகளை முடிக்கிறார். மேலும் மைம் கோபி, அருள்தாஸ் ஆகியோர் துவம்சம் செய்கிறார். மேலும் மைம் கோபி, அருள்தாஸ் ஆகியோரின் அண்ணன் தலைமறைவாக இருக்கும் ஹரிஷ் பெராடியை வெளிநாட்டில் இருந்து சுந்தர்.சி வரவழைக்கிறார். மேலும் சுந்தர் சி ரகசிய காவல்துறை அதிகாரி இல்லை என்று கேத்தரின் தெரேசாவுக்கு தெரிய வருகிறது.இறுதியில் சுந்தர்.சி யார்? எதற்காக ஹரிஷ் பெராடியை வரவழைக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்து இருக்கும் சுந்தர்.சி ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சண்டைக் காட்சிகளில் அதிக டூப் போட்டு சமாளித்து இருக்கிறார். வடிவேலுவை பக்கபலமாக வைத்து திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார். வடிவேலுவின் டைமிங் காமெடி ஆங்காங்கே சிரிக்க வைத்து இருக்கிறது. குறிப்பாக நீண்ட வசனம் பேசி அசத்தி இருக்கிறார். நாயகியாக நடித்து இருக்கும் கேத்தரின் தெரேசா பொம்மை போல் வந்து சென்று இருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் வாணி போஜன் நடிப்பால் மனதில் பதிந்து இருக்கிறார். வில்லன் கேங்கில் இருக்கும் மைம் கோபி, அருள்தாஸ், ஹரிஷ் பெராடி, காளை மற்றும் ஹீரோ கேங்கில் இருக்கும் பக்ஸ், முனீஷ்காந்த், சந்தான பாரதி, விச்சு அனைவரும் ஒன்று சேர்ந்து சிரிக்க வைக்க முயற்சி செய்து இருக்கிறார்கள்.இயக்கம்பணத்தை கொள்ளையடிப்பதை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார்.

இயக்குனர் சுந்தர்.சி. முதல் பாதி ஒரு படமும் இரண்டாம் பாதி ஒரு படமும் பார்த்த அனுபவத்தை கொடுத்து இருக்கிறார். சுந்தர்.சி படத்தில் கதை இல்லையென்றாலும் சதை இருக்கும் என்று சொல்லுவார்கள். இந்த படத்தில் இரண்டுமே இல்லாதது வருத்தம். வடிவேலுக்கு இன்னும் அதிக வாய்ப்பு கொடுத்து இருக்கலாம். தியேட்டர் காமெடி காட்சி பெரியதாக எடுபடவில்லை. ஒளிப்பதிவாளர் இ.கிருஷ்ண மூர்த்தி படம் முழுவதையும் கலர்புல்லாக காண்பிக்க முயற்சி செய்து இருக்கிறார். இசையமைப்பாளர் சத்யாவின் இசையில் பாடல்கள் மனதில் பதியவில்லை. பின்னணி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. A.C. Shanmugam, A.C.S. Arunkumar, Kushboo சுந்தர் ஆகியோர் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர்.

gangers movie review
jothika lakshu

Recent Posts

தமிழக வெற்றி கழகம் பற்றி கேட்ட கேள்வி.. திவ்யா சத்யராஜ் கொடுத்த பதில்..!

தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…

46 minutes ago

தயாரிப்பாளரான அஜித் குமார்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…

1 hour ago

விஜய்க்கும் பவர் ஸ்டாருக்கும் தான் போட்டியே.. புதிய கட்சி தொடங்கப் போகும் பவர் ஸ்டார்..!

விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…

2 hours ago

திருடு போன சீதாவின் தாலி செயின்.. முத்து மீனா எடுக்கும் முயற்சி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…

6 hours ago

விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. சரத்குமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…

6 hours ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

21 hours ago