தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் தனுஷ், ஆனந்த் எல் ராய் இயக்கிய ‘ராஞ்சனா’ படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். தற்போது ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் தனுஷ் மேலும் ஒரு இந்தி படத்தில் நடித்து முடித்துள்ளார். ‘அத்ரங்கி ரே’ என பெயரிடப்பட்டுள்ள இப்படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இந்நிலையில் தனுஷ் நடித்துள்ள ‘கர்ணன்’ படத்தை ஓடிடியில் பார்த்த இயக்குனர் ஆனந்த் எல் ராய், தனுஷையும் படக்குழுவினரையும் வெகுவாக பாராட்டி உள்ளார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது: “அற்புதம், புத்திசாலித்தனம்… இப்படித்தான் கர்ணன் படத்தின் அனுபவத்தை என்னால் விவரிக்க முடியும். மாரி செல்வராஜ், என்ன ஒரு அற்புதமாக கதையை சொல்லியிருக்கிறார். உங்கள் எண்ணங்களை செல்லுலாய்டில் அழகாக வர்ணம் பூசி இருக்கிறீர்கள். தனுஷ், நீ ஒரு நடிகன் என நான் நினைத்தேன், ஆனால் நீ ஒரு மந்திரவாதி” எனக் குறிப்பிட்டுள்ளார்.
OUTSTANDING & BRILLIANT…This is how you can describe this experience called #Karnan @mari_selvaraj What a storyteller ???? The way you painted ur thoughts on the celluloid. Take a bow!! @dhanushkraja You are a magician mere bhai ..u should have told me.I thought u r an actor.???? pic.twitter.com/f1sfRkfNbZ
— Aanand L Rai (@aanandlrai) May 17, 2021

