விஜய் ஆண்டனியின் ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தில் இணைந்த பிரபல நடிகர்

திரையுலகில் இசையமைப்பாளராக அறிமுகமாகிய விஜய் ஆண்டனி தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். தற்போது இவர் கைவசம் அக்னி சிறகுகள், காக்கி, தமிழரசன், பிச்சைக்காரன் 2, கொலை போன்ற படங்கள் உள்ளன.

இதுதவிர, கோலிசோடா பட இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகும் ‘மழை பிடிக்காத மனிதன்’ என்கிற படத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

இந்நிலையில், இப்படத்தில் நடிகர் சரத்குமாரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இதில் அவர் விஜய் ஆண்டனிக்கு நண்பராக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதன்மூலம் விஜய் ஆண்டனியும், சரத்குமாரும் முதன்முறையாக இணைந்துள்ளனர்.

ஏற்கனவே இரண்டு கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட படப்பிடிப்பை டையு, டாமனில் வருகிற டிசம்பர் மாதம் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.

Mazhai Pidikaadha Manithan
Suresh

Recent Posts

FLAG Trailer

FLAG Trailer | SP.Ponshankar | V.Vairaprakash | Rajaravivarma & Balasubramanian.G

1 day ago

குழந்தையின் மொட்டை விழா.. மீண்டும் ஒன்றாக தோன்றிய மாதம்பட்டி ரங்கராஜ் – ஜாய் கிரிசில்டா!

பிரபல சமையல் கலைஞரும் நடிகருமான மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா இடையேயான தனிப்பட்ட விவகாரம் கடந்த…

2 days ago

நீண்ட காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி.. விரைவில் வெளியாகிறதா ‘சதுரங்க வேட்டை 2’?

அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் நீண்ட காலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் ‘சதுரங்க வேட்டை 2’ திரைப்படம், தற்போது திரையரங்குகளை எட்டுவதற்கான…

2 days ago

பாஜகவில் இருந்து விலகிய பிரபல நடிகர் தேவன்.. திடீர் முடிவுக்கு இதுதான் காரணம்!

திரைப்பட நடிகரும், கேரளா பாஜக மாநில துணைத் தலைவருமான தேவன், பாஜகவில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளார். கட்சியின் அடிப்படை…

2 days ago

27 வயதில் உயிரிழந்த பாலிவுட் நடிகை அனன்யா ராஜ்.. யார் இவர்?

பாலிவுட் திரையுலகில் வளர்ந்து வந்த இளம் நடிகை அனன்யா ராஜ், தனது 27 வயதில் உயிரிழந்துள்ளார். தீவிர உடல் மற்றும்…

2 days ago

பிரபல ஹாலிவுட் நடிகை ஹெய்டன் பனெட்டியர் 36 வயதில் திடீர் மரணம்!

‘ஹீரோஸ்’, ‘நாஷ்வில்லி’ உள்ளிட்ட பிரபல தொலைக்காட்சித் தொடர்களிலும், ‘ஸ்க்ரீம் 4’, ‘ஸ்க்ரீம் 6’, ‘ரிமம்பர் தி டைட்டன்ஸ்’ உள்ளிட்ட திரைப்படங்களிலும்…

2 days ago