தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் படத்தின் பிசினஸ் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது இதுவரை தமிழக உரிமை 40 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவே சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படங்களில் ரெக்கார்ட் பிரேக்கிங் என சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.