Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இயக்குநரான நடிகர் விஷால்! –

Director actor Vishal!

இயக்குநர் ரவி அரசு இயக்கத்தில் நடிகர் விஷால் நடித்து வரும் ‘மகுடம்’ படம் பற்றி பல சர்ச்சையான தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த நிலையில், தற்போது படத்தை விஷாலே இயக்கிக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், ‘மகுடம்’ படத்தில் நடிப்பதோடு, படத்தை விஷால் இயக்கவும் செய்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து விசாரித்ததில், தகவல் உண்மை தான் என்று படப்பிடிப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், இதற்கான கரணம் படப்பிடிப்பு வட்டாரம் சொன்ன தகவல்கள். ரவி அரசு இயக்குனரால் ஏற்பட்ட பிரச்சனைகள் அவர் செய்த தவறுகளால் தயாரிப்பாளருக்கு எந்த விதத்திலும் பாதிப்பு ஏற்படக் கூடாது. தன்னை நம்பி முதலீடு செய்யும் தயாரிப்பாளர் எந்த விதத்திலும் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடாது என்று நடிகர் விஷால் இனி படத்தை தானே இயக்குவதாக முடிவு எடுத்தாராம்.

அதன்படி, தற்போது விஷால் ‘மகுடம்’ படத்தை இயக்கி வருகிறார்.

நடிகர் விஷால் இயக்குனராக இயக்கி வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் இயக்குநர்கள், நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் என்று பல புதியவர்களை அறிமுகப்படுத்திய பிரபலமான நிறுவனமாக திகழும் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் 99 வது படம் ’மகுடம்’ என்பது குறிப்பிடத்தக்கது.

Director actor Vishal!
Director actor Vishal!