Bharathi Kannamma Serial Episode Update 23.03.22
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இன்றைய எபிசோட்டில் வெண்பா பாரதியை ஏற்றிவிட்டு கொண்டிருக்க அந்த நேரத்தில் வந்த கண்ணம்மா உன்ன பத்தி நான் சொல்கிறேன் என கூறுகிறார். இதனால் வெண்பா அதிர்ச்சி ஆகி திரும்பி பார்க்கிறார். நீ ஒரு விஷப் பாம்பு, எங்க ரெண்டு பேருக்குள்ள நடக்கிற பிரச்சனைகளுக்கு நீதான் என இந்த பற்றி சொல்ல பாத்தியா பாரதி உன் எதிர்க்கவே எப்படி பேசுறா பாரதியை தூண்டிவிட அமைதியாக இருக்கிற கோபத்துக்கு அப்படியே அறைஞ்சுருவேன் என கண்ணம்மா கூறுகிறார்.
லட்சுமி இங்கு வந்தாளா அவளை காலையில் இருந்து ஆளையே காணோம் என கண்ணம்மா கூறுகிறார். வாங்க புளீளையை காணோம்னு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் கொடுக்கலாம் என சொல்ல நான் எதுக்கு வரணும்? உன் புள்ள காணோம்னா நீ தான் கம்ப்ளைண்ட் கொடுக்கணும் என கூறுகிறார். நான் வேணா ஒரு இன்ஸ்பெக்டர் நம்பர் தரேன் அவருக்கு போன் பண்ணி சொல்லு கண்டுபிடித்துக் கொடுப்பார் என வெண்பா கூறுகிறார். உன்கிட்ட நான் ஏதாவது கேட்டனா என கேட்க பார்த்தியா இவளுக்கு பிள்ளை எல்லாம் இரண்டாவதுதான் உன் கூட சேர்ந்து வாழனும் அதுதான் இவளுடைய டார்கெட் என வெண்பா கூறுகிறார். ரெண்டு பேரும் கொஞ்சம் அமைதியா இருங்க என பாரதி சத்தம் போட ஓ அப்படியா ரெண்டு பேரும் சேர்ந்து பேசுங்க, போய் குழந்தையை தேடுங்கள் நான் கிளம்புறேன் என வெண்பா கிளம்பிவிடுகிறார்.
கண்ணம்மா உங்கள ஒரு ஆளுன்னு மதிச்சு உங்க கிட்ட வந்தேன் பாரு என் புத்தியை சொல்லணும் என சொல்லிவிட்டு கிளம்பி விடுகிறார். லட்சுமி எங்க போயிருப்பா இவ பண்ண தப்புக்கு அந்த குழந்தை என்ன பண்ணும் ஸ்கூல் பக்கத்துல தான் எங்கேயாவது இருப்பார் தேடிப் பார்க்கலாம் என ஹாஸ்பிடலில் இருந்து கிளம்புகிறார் பாரதி. அந்த நேரத்தில் லக்ஷ்மி ஹாஸ்பிடலுக்கு வருகிறார். பாரதியை பார்த்ததும் அப்பா என ஓடிச் சென்று கட்டிப் பிடித்துக் கொள்வது போலவும் பாரதியும் லட்சுமியை கட்டியணைத்து முத்தமிடுவது போலவும் நினைத்து பார்க்கிறார். பாரதி லட்சுமி லட்சுமி என கூப்பிட அவர் அப்படியே கனவில் இருக்க அவரை அசைத்து நினைவிற்குக் கொண்டு வருகிறார்.
உங்கள பாக்கணும் போல இருந்துச்சு அதனால தான் வந்தேன் என லட்சுமி கூறுகிறார். காலையில் இருக்கு எங்க போயிருந்த என கேட்க எங்க அப்பாவை தேடி போய் இருந்தேன் என சொல்கிறார். ஏன் இப்படி பண்ற உங்க அம்மா பாவம், எவ்வளவு பயந்து இருப்பாங்க என சொல்ல இனிமே எங்க அப்பாவை தேடி போக மாட்டேன் அதுக்கு அவசியம் இல்லை என சொல்ல ஏன் இப்படி சொல்ற என பாரதி கேட்கிறார். நீங்கதான சொன்னீங்க பெரியங்க சொன்னா கேட்கணும்னு எங்க அம்மா சொல்லி இருக்காங்க என கூறுகிறார்.
பிறகு பாரதி சரி சாப்பிட்டியா இல்லையா எனக் கேட்க இன்னும் இல்ல அப்பாவை தேடுவதில் பசியே தெரியல என கூறுகிறார். ஆனா இப்ப பசிக்குது என சொல்ல பாரதி ஒருவரை அழைத்து சாப்பாடு வாங்கிட்டு வருமாறு சொல்கிறார். பிறகு உங்க கூட கொஞ்ச நேரம் இருந்திட்டுப் போகவா உங்க கூட இருக்கணும்னு ஆசையா இருக்கு என சொல்ல பாரதி லட்சுமியை அவருடைய கேபினுக்கு அழைத்துச் செல்கிறார். பிறகு சாப்பாடு வந்துவிட ஊட்டி விட மாட்டிங்களா என லட்சுமி கேட்கிறார். எங்க அம்மா உங்க பொண்ணு ஹேமாவுக்கு ஊட்டி விடுறாங்கள அந்த மாதிரி நீங்க எனக்கு ஊட்டி விட மாட்டீங்களா? உங்களுக்கு என்ன பிடிக்கும் தானே என் மேல பாசம் இருக்கு தானே அப்போ ஊட்டி விட மாட்டீங்களா எனக் கேட்க சரி ஊட்டி விடுகிறேன் என பாரதி ஊட்டி விடுகிறார்.
என்கிட்ட இவ்வளவு அன்பா இருக்கீங்க அப்புறம் ஏன் எங்களை ஏத்துக்க மாட்டுறீங்க என மனதுக்குள் ஏங்குகிறார் லட்சுமி. இந்த பக்கம் ஸ்கூலில் இருந்து வந்த ஹேமா மதியம் யாரும் சாப்பாடு கொண்டு வரலாம் என சௌந்தர்யாவிடம் கூற அவர் அதிர்ச்சி அடைகிறார். லட்சுமியின் ஸ்கூலுக்கு வரல எனச் சொல்வதைக் கேட்டு லட்சுமி எங்கே போனார் என தெரியவில்லை என்று பதறுகிறார்.
ஹேமாவை மேலே அனுப்பி வைத்துவிட்டு லட்சுமி அப்பாவை தேற்றனே எங்கேயாவது கிளம்பிட்டாளா உலகம் கெட்டுக் கிடக்கு அவர் ஏதாவது பிரச்சனையில் மாட்டிக்கொண்டு எனக்கு ரொம்ப பயமா இருக்கு நான் ஏன் பெரிய பேத்தியை தேடி போகிறேன் என சௌந்தர்யா கிளம்புகிறார். இதைக் கேட்ட ஹேமா கீழே வந்து யார் பாடியது பெரிய பேத்தி என சொல்ல சௌந்தர்யா நான் அப்படி சொல்லலையே என கூறுகிறார். நீங்கதான் சொன்னீங்க என மீண்டும் சொல்ல அகிலன் சொல்லுங்கம்மா யார் அந்த பெரிய பேத்தி ஹேமா கேட்கிறால என கோர்த்து விடுகிறார். சௌந்தர்யாவின் கணவர் உங்க அத்த பொண்ணு, அவளை பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது சௌந்தர்யா பார்க்கப் போகிறாள் என கூறுகிறார்.
ஹேமா கேள்வி மேல் கேள்வி கேட்க நீ கேள்வி கேட்டுகிட்டே இருப்ப, அஞ்சலி இவளை கூட்டிட்டு போய்ட்டு ஸ்நாக்ஸ் ஏதாவது செய்து கொடு என அனுப்பி வைக்கிறார். பிறகு சௌந்தர்யா லட்சுமியை தேடி செல்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Asku Macha Lyrical Video | Drones | Siddhi Idnani | Anjali Nair | Dravid Selvam…
Bloody Politics Official Teaser | Gautham Ram Karthik | Anchana Nethrun | Dhina Raghavan |…
PAAVAI Official Trailer | Rahul Vignesh | Mullai | Niranjana | Senduran | Anosh
DHEIVAA Taster - Refire with Uyiri | Shanthakumar Chandramohan | Bala Subramaniam | Dheena Dhayalan
Centimeter Lyric Video | XY | C.V. Kumar | Srikant Krishna | Sreekanth Hariharan |…
Kalla Nikkiriye Lyric Video | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind Vasantha…