செழியனை கன்னத்தில் அறைந்த பாக்கியா.. அதிர்ச்சியான கோபி.. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோட்டில் கோபியிடம் பாக்கியா ஜெனியின் அம்மா வந்து பேசியதைப் பற்றி சொல்ல அவர்கள் வளர்ந்தவர்கள் அவர்களது பிரச்சனைக்கு நீதான் காரணம். அவர்கள் பிரச்சனையை அவர்களே தீர்த்து கட்டும் என கூறுகிறார்.

வீடா இது ஒரே பிரச்சனை, வீட்டுக்குள்ள வந்தாலே எரிச்சலா இருக்கு. நடக்கிற பிரச்சனைகளை உன்னால தீர்க்க முடியும்னா நீ ஆண்டில் பண்ணு இல்லன்னா அமைதியா ஓரமா உட்காரு. வீட்டுக்குள்ள வந்ததும் எல்லா பிரச்சினையும் எடுத்துட்டு வந்து என் தலை மேல வைக்காத ஒரே வெறுப்பா இருக்கு. வீட்டுக்குள்ள பிரச்சனை இருக்கலாம் ஆனால் பிரச்சனையே வீடா இருக்கக்கூடாது, நரகத்துல இருக்கிறமாதிரி இருக்கு என கூறுகிறார்.

எல்லாத்துக்கும் நான்தான் காரணம் என்று பழியை தூக்கிப் போடாதீங்க நானும் இந்த வீட்லதான் இருக்கேன் நடக்கிற பிரச்சனையை நான் யார் கிட்டே போய் சொல்லுவேன் உங்களிடம் தான் சொல்ல முடியும் என பாட்கே கூறுகிறார். உன்னை யார் இருக்க சொன்னான் எங்கேயாவது கிளம்பி போக வேண்டியதுதானே என கோபி சொல்வதைக் கேட்டு அதிர்ச்சி அடைகிறார் பாக்கியா. பிறகு கல்யாண ஆர்டர் எடுத்து சமைத்து கிடைத்த பணத்தை கோபியிடம் எடுத்து வந்து கொடுக்கிறார். உங்களுக்காகத்தான் சமையல் ஆர்டர் எடுத்து செய்தேன். இந்த பணத்தை வாங்கிக்கங்க. உங்க ஃபிரண்டுக்கு கொடுக்கணும்னு சொன்னீங்களே அவருக்கு கொடுங்க என பாக்யா சொல்ல செல்வி சொன்னது போல இதற்கும் கோபி பாக்கியாவை நக்கல் அடிக்கிறார். உன்னை எப்படி பாராட்டுவதுன்னு தெரியல, நீ எவ்வளவு பெரிய தியாகி என கிண்டல் அடித்துவிட்டு உள்ளே செல்கிறார்.

அதன்பிறகு ஈஸ்வரி பாக்கியா மற்றும் கோபியை அமரவைத்து செழியன் ஜெனி பிரச்சினை பற்றி பேச வேண்டும் எனக் கூறுகிறார். அவங்க அம்மா இங்க வந்து வருத்தப்பட்டு போன பிறகு நாம பேசி தான் ஆகணும் என்று சொல்கிறார். உங்களுக்குள்ள என்ன பிரச்சனை என கோபி கேட்க செழியன் ஜெனி மீது புகார்களை அடுக்கிக் கொண்டே செல்கிறார். எதையுமே எனக்கு புடிச்ச மாதிரி செய்யறது இல்லை. தினம் தினம் எல்லாத்துக்கும் சண்டைதான் என்று கூறுகிறார்.

செழியன் கத்திப் பேச ஜெனி மெதுவா பேசு எதுக்கு கத்தி பேசுற என சொல்ல பாருங்க எனக்கு கிளாஸ் எடுக்கிறார் எங்க அப்பா அம்மாகிட்ட பாட்டிகிட்ட எப்படி பேசனும்னு எனக்கு தெரியும் அதை சொல்லிக் கொடுக்க நீ யாரு என செழியன் கூறுகிறார். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமாக தானே இருக்கீங்க அதுக்கு தான கல்யாணம் பண்ணிக்க என ஈஸ்வரி கேட்க ஒரு சந்தோஷமும் இல்ல ஏண்டா கல்யாணம் பண்ணனும்னு இதுக்கு. இவளை எங்க வீட்டுக்கு அனுப்பிட்டு டிவோர்ஸ் கொடுத்து விடலாம் போல இருக்கு என்ன செழியன் சொல்வதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர்.

இவ அவங்க வீட்டுக்கு போய்ட்டா நீ என்ன பண்ணுவ என பாக்கியா கேட்க அவங்க வீட்டுக்கு போய்ட்டு அவ தனியா இருக்கட்டும் நான் இங்க தனியா இருக்கேன் நாங்க பிரிகிறதால இங்கே எதுவும் மாறப் போவதில்லை என சொல்ல கோபமான பாக்கியா செழியனை பளார் என்று அறைந்தார்.

நீ என்ன பண்ணாலும் பார்த்துட்டு இருப்பேன் நெனச்சியா தொலைத்து விடுவேன். அந்தப் பொண்ணு என்ன தப்பு பண்ணா? தேவையில்லாம அவர் மேல பழி சொல்றதை நிறுத்து. அவளுக்கு கொடுத்தான் உன்மேல கேட்கப்பட்ட கம்ப்ளைன்ட் இருக்கு அதுக்காக அவ விவாகரத்து பண்றேனு ஒரு நாளும் சொன்னதில்லை. விவாகரத்து நான் உனக்கு அவ்வளவு ஈசியா போச்சா. குடும்ப பிரச்சனைகள் இருக்கத்தான் செய்யும் அதை உட்கார்ந்து பேசி தீர்க்கணும். உனக்கு அவளுக்கு பிடிச்ச போய் கல்யாணம் பண்ணிக்கிட்ட இப்போ உன் பேச்சை கேட்கலனா விவாகரத்து பண்றியா?

உன்ன பத்தி மட்டும் யோசிக்கிறது வாழ்க்கை இல்ல உன்ன சுத்தி இருக்கு உங்கள பத்தியும் யோசிக்கணும். உன்னால எப்படி இப்படி சுயநலவாதியா மாற முடிந்தது என திட்டுகிறார். ஒரு பிரச்சனையை பேசித் தீர்க்க முடியல ஆனா நீங்கதான் எதுக்கு கல்யாணம் பண்ணிக்க என பாக்கியா கேட்பதெல்லாம் கோபிக்கு அவர் முன்னாடி அவரைப் பார்த்து கேட்பது போலவே சிந்தித்து பார்க்கிறார். பாக்கியா கேட்ட கேள்விகளால் அதிர்ச்சி அடைகிறார் கோபி.

ஈஸ்வரி எனக்கு நீயா ஜெனியானு வந்தா பக்கம் தான் நிற்பேன். ரெண்டு பேரும் உட்கார்ந்து பேசுங்க, சண்டை போடுங்க என்ன வேணும்னா சொல்லிக்கங்க ஆனா இதுதான் உங்களுக்கு கடைசி சண்டையா இருக்கணும் என சொல்லி இருவரையும் மேலே அனுப்பி வைக்கிறார்.

நான் பேசுனது சரிதானே என பாக்கியா கோபியிடம் கேட்க கோபி பயத்தில் சரிதான் 100% சரியென கூறுகிறார்‌‌. விவாகரத்து பண்றாங்க விவாகரத்து அவ்வளவு ஈசியா போச்சா இவனுக்கு பாருங்க அத்தை என பாக்கியா ஈஸ்வரியிடம் பேசுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Serial Episode Update 23.03.22
jothika lakshu

Recent Posts

RANABAALI Teaser

RANABAALI Teaser (Tamil) - The Savage's Oath | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan

15 hours ago

Magale Music Video

Magale Music Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Balaji Tharaneetharan

15 hours ago

இளையதிலகம் பிரபு நடிக்கும் ‘அழகிய லைலா’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய…

15 hours ago

மதுரையில் ‘சேயோன்’ படப்பிடிப்பு: ரசிகர்களுக்கு ஜிகர்தண்டா வாங்கிக் கொடுத்த சிவகார்த்திகேயன்!

கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிப்பில், இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய திரைப்படம் ‘சேயோன்’.…

16 hours ago

இந்தி தேசிய மொழியா? சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்புக் கோரிய சிவராஜ் குமார்!

சமீபத்தில் நடைபெற்ற திரைப்பட விழா ஒன்றில் இந்தியை ‘தேசிய மொழி’ எனக் குறிப்பிட்டதற்கு கன்னட நடிகர் சிவராஜ் குமார் மன்னிப்புக்…

16 hours ago

தீபாவளி ரிலீஸ்: சூர்யாவின் 47வது படத்திற்கு ‘SCENE’ என தலைப்பு வைப்பு!

‘ரோமஞ்சம்’, ‘ஆவேஷம்’ ஆகிய படங்களை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 47வது படத்திற்கு ‘SCENE’ என…

16 hours ago