இளையதிலகம் பிரபு நடிக்கும் ‘அழகிய லைலா’ படப்பிடிப்பு தொடங்கியது!

ஏ.ஆர்.எம். ஸ்டுடியோஸ் மற்றும் யோகா ஸ்டுடியோஸ் சார்பில் ஏ.ஆர். மதியழகன் மற்றும் ஆரத்தி இணைந்து தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘அழகிய லைலா’. இப்படத்தில் இளையதிலகம் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இப்படத்தில் அப்சரா ராணி கதாநாயகியாக நடிக்கிறார். யோகி பாபு, தம்பி ராமையா, விடிவி கணேஷ், கிங்ஸ்லி, சரத், பூவையார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சி. சத்யா இசையமைக்க, வினோத் பெருமாள் ஒளிப்பதிவு செய்கிறார்.

முழுக்க முழுக்க நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகும் இப்படத்தை ரெஜித் இயக்குகிறார். கேரளாவைச் சேர்ந்த தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் படக்குழுவினரால் உருவாகும் இப்படம், தமிழில் ரெஜித் இயக்கும் முதல் திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படம் குறித்து பேசிய நடிகர் பிரபு, தனது தந்தை சிவாஜி கணேசனுக்கு அளித்த ஆதரவைப் போலவே தனக்கும், தனது மகன் விக்ரம் பிரபுவுக்கும் ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவளித்து வருவதாக தெரிவித்தார். அதேபோல் ‘அழகிய லைலா’ படக்குழுவினருக்கும் ஆதரவு அளிக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், “வந்தாரை வாழ வைக்கும் தமிழ்நாடு” என்ற பெருமைக்கேற்ப இப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர்கள் உள்ளிட்ட படக்குழுவினரையும் தமிழ் ரசிகர்கள் கொண்டாட வேண்டும் என பிரபு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Suresh

Recent Posts

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

4 hours ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

4 hours ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

4 hours ago

ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…

5 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

5 hours ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

5 hours ago