சரவணனை திட்டிய சிவகாமி..அர்ச்சனா போட்ட திட்டம்..இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் ராஜா ராணி 2. இன்றைய எபிசோடில் சரவணன் கருணாகரன் பையனை அடித்து சண்டையிட்ட செய்தியைக் கேட்ட அவருடைய அம்மா சிவகாமி இதெல்லாம் நமக்கு தேவையா இந்த கருணாகரன் எவ்வளவு பெரிய ரவுடி அவனுக்கு ஆள்பலம் பணபலம் அரசியல் செல்வாக்கு என எல்லாம் உள்ளது அவனுடன் எதுக்கு பகைத்துக் கொள்ள வேண்டும் என திட்டுகிறார்.

இதுக்கெல்லாம் காரணம் சந்தியா மார்க்கெட்டில் இரண்டு ரவுடிகளை பிடிக்க அடித்தது தான் காரணம் என கொளுத்திப் போடுகிறார் அர்ச்சனா. இதனால் சிவகாமி சந்தியாவை திட்டிவிட்டு இன்னும் என்னவெல்லாம் பிரச்சனை வரப் போகுதோ, நீ சும்மாவே இருக்க மாட்டியா யார் என்ன பண்ணா உனக்கு என்ன? எதுக்கு சாகசம் பண்ணிக்கிட்டு வர? இதனால எவ்வளவு பிரச்சனை பாரு என திட்டுகிறார்.

அதன்பிறகு செந்தில் அர்ச்சனாவை திட்டி உள்ளே அழைத்து வருகிறார். அம்மா கிட்ட எதோ சொல்ல கூடாதுன்னு சொல்றேனோ அத கரெக்டா போட்டு கொடுத்துட்ட என அடிக்க பாய்கிறார். நீ எல்லாம் சும்மாவே இருக்க மாட்டியா என கூறுகிறார். அதன்பிறகு விக்கிக்கு போன் போட்டு அவரை தூண்டி விடுகிறார். சரவணன் சொல்லாததை எல்லாம் சொல்லுவது போல சொல்லி விட்டு சரவணன் மீது கோபத்தை அதிக படுத்துகிறார். நாளைக்கு என்ன நடக்குதுன்னு பாருங்க என விக்கி கூறிவிட்டு போனை வைக்கிறார்.

இந்த பக்கம் ரூமில் சிவகாமி கருணாகரன் எவ்வளவு பெரிய ரவுடி அவனால் என்னவெல்லாம் பிரச்சினை வரக்கூடாது என பயந்து கொண்டிருக்க அவருக்கு ஆறுதல் கூறுகிறார் அவருடைய கணவர்.

அதன்பிறகு சரவணன் கடையில் இருக்கும்போது ஹெல்த் இன்ஸ்பெக்டர் கடைக்கு வருகிறார். கடையில் இருக்கும் பொருட்களை பரிசோதனை செய்ய வேண்டும் உன் மீது நிறைய குற்றச்சாட்டுக்கள் வந்து இருக்கு என கூறுகிறார். பிறகு கடையில் இருக்கும் கோதுமை மாவு சர்க்கரை உள்ளிட்ட பொருட்களை சேம்பிள் எடுத்துக் கொண்டு செல்கிறார். சந்தியா தன்னை சிக்க வைத்து வேலை பறிபோனது பற்றி கூறுகிறார் மேலும் கருணாகரன் எதுக்கு பகைத்துக் கொள்கிறாய். இனி இந்த ஊரில் நீ எப்படி நிம்மதியாக இருக்கிறார்கள் பார்க்கலாம். உன்ன எப்படி சிக்க வைக்கிறேனு பாரு என சொல்கிறார்.

பிறகு விக்கி போன் செய்து சரவணனை மிரட்ட, உன்னால் என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ என சபதம் எடுக்கிறார். இத்துடன் இன்றைய ராஜா ராணி 2 சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Raja Rani 2 Serial Episode Update 23.03.22
jothika lakshu

Recent Posts

‘டாக்ஸிக்’ படத்தின் ‘தடுமாறுதே’ பாடல் வெளியீடு – யஷ், தாரா சுதாரியாவின் கெமிஸ்ட்ரி ரசிகர்களை கவர்கிறது!

'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…

5 hours ago

பாக்ஸ் ஆபீஸில் மாஸ் காட்டும் ‘கட்டா குஸ்தி 2’ – உலகளவில் ரூ.55 கோடி வசூல்!

செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…

5 hours ago

300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பணியாற்றிய ‘ட்ரோன்மேன்’ அரவிந்த்; தேசிய ட்ரோன் விருதால் கவுரவிக்கப்பட்ட சாதனையாளர்

தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…

5 hours ago

நடிகர் அர்ஜுன் தாஸின் கான் சிட்டி ஓடிடி தேதி அறிவிப்பு!

அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…

1 day ago

கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…

1 day ago

தனுஷை விட பெரிய நடிகர்கள் இல்லையா? – கஸ்தூரி ராஜா ஆவேசம்

72வது தேசிய திரைப்பட விருதுகள் பட்டியலில் நடிகர் தனுஷிற்கு இரண்டு தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், இதுகுறித்து எழுந்த அரசியல்…

1 day ago