கவின் – நயன்தாரா நடிக்கும் ‘Hi’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘Hi’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

‘நட்புனா என்ன தெரியுமா’ படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கவின், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். தொடர்ந்து ‘லிஃப்ட்’, ‘டாடா’, ‘ஸ்டார்’, ‘ப்ளடி பக்கர்’, ‘மாஸ்க்’ உள்ளிட்ட படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்துள்ளார்.

‘Hi’ திரைப்படத்தில் கவினுடன் இணைந்து நடிகை நயன்தாரா மற்றும் நடிகர் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வயதில் இளையவர், தன்னைவிட மூத்த பெண்ணை காதலிக்கும் கதைக்களத்தை மையமாகக் கொண்டு இப்படம் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே வெளியான இப்படத்தின் போஸ்டர்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அதன்படி, ‘Hi’ திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Suresh

Recent Posts

Kadalaadum Seemayile Video Song

Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…

5 hours ago

Varnajaalam Tamil Lyric Video

Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…

5 hours ago

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

2 days ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

2 days ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

2 days ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

2 days ago