Rashmika Mandanna’s Pan-India Action Drama ‘Maisa’ Gets a Release Date
நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர புல்லே இயக்கத்தில், அன்ஃபார்முலா ஃபிலிம்ஸ் சார்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தில் ராஷ்மிகா கோண்ட் பழங்குடியின பெண்ணாக நடித்துள்ளார்.
கதாபாத்திரத்தின் உணர்வையும், தீவிரத்தையும் திரையில் இயல்பாக வெளிப்படுத்துவதற்காக ராஷ்மிகா கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அதன்படி, ‘மைசா’ திரைப்படம் வரும் நவம்பர் 27, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. இதனை அறிவிக்கும் வகையில் வெளியிடப்பட்ட போஸ்டரில், கையில் பிரம்மாண்ட ஈட்டியுடன் ஆக்ரோஷமான தோற்றத்தில் ராஷ்மிகா மந்தனா இடம்பெற்றுள்ளார். போர்க்காயங்களுடன் காணப்படும் அவரது தோற்றம், பின்னணியில் இடம்பெற்றுள்ள மக்கள் கூட்டம் மற்றும் தீப்பிழம்புகள் ஆகியவை படத்தின் பிரம்மாண்டத்தையும் ஆக்ஷன் களத்தையும் வெளிப்படுத்துகின்றன.
மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வரும் ‘மைசா’, அதிரடியான ஸ்டண்ட் காட்சிகள் மற்றும் பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடன் ரசிகர்களுக்கு பரபரப்பான ஆக்ஷன் அனுபவத்தை வழங்கும் வகையில் உருவாகி வருகிறது. குறிப்பாக, பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்ட ஆக்ஷன் திரைப்படங்களின் எல்லையை விரிவுபடுத்தும் நோக்கில் இப்படம் உருவாக்கப்பட்டு வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இதனிடையே, சவாலான ஆக்ஷன் காட்சி ஒன்றில் நடித்தபோது ராஷ்மிகா மந்தனாவுக்கு சமீபத்தில் காயம் ஏற்பட்டது. தற்போது அதிலிருந்து குணமடைந்து வரும் அவர், விரைவில் மீண்டும் படப்பிடிப்பில் இணைந்து இறுதிக்கட்ட பணிகளை நிறைவு செய்ய உள்ளார். படப்பிடிப்பில் இன்னும் 12 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், VFX மற்றும் பின்னணி இசை உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
ஈஸ்வரி ராவ், குரு சோமசுந்தரம், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம், தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது.
MYSAA!
The rage! The pain! The heartache! The grief! The grit! The courage! The power and the storm you don’t anticipate coming – That’s Mysaa! 🔥
In cinemas worldwide on 27.11.26!❤️@RawindraPulle @jakes_bejoy @unformulafilms @TSeries @tseriessouth pic.twitter.com/aaDqspvHE7
— Rashmika Mandanna (@iamRashmika) September 1, 2026
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…
தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…
தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார். லைகா புரொடக்ஷன்ஸ்…
Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…
Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…