பிறந்தநாள் விழாவில் கலந்துகொண்ட பாரதி.. கண்ணம்மாவுக்கு பாரதி கொடுத்த ஷாக்… இன்றைய பாரதிகண்ணம்மா எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. லட்சுமி தன்னுடைய தோழிகளை அழைத்து கீழே விழுந்த எங்கப்பா காரில் வந்து இறங்குவார் அவர் இறங்கியது இந்த பூக்களை அவர்மேல போடனும் என சொல்கிறார். இதையெல்லாம் பார்த்த சௌந்தர்யாவின் கணவர் லட்சுமி எவ்வளவு எதிர்பார்ப்போடு இருக்கா பாரு என சொல்கிறார்.

பிறகு பாரதி வந்தால் என்ன நடக்கும் என்ற குழப்பத்தில் சௌந்தர்யாவும் அவருடைய கணவரும் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் பாரதி காரில் வந்து இறங்கினார். பாரதி வந்து இறங்கியதும் லட்சுமியின் தோழிகள் பூக்களை மேலே தூவ அப்போது ஓடி வந்த லட்சுமி சாரி அங்கிள் எங்க அப்பா னு நினைச்சு உங்க மேல பூ போட்டுட்டாங்க என சொல்கிறார். பிறகு கண்ணம்மாவின் கீழே வர ஹேமாவும் லட்சுமியும் கண்ணம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல சொல்கின்றனர். பாரதி அமைதியாகவே இருக்க முதலில் மேலே போகலாம் கேக் கட் பண்ணும் போது வாழ்த்து சொல்லிக்கட்டும் என கூறி மேலே செல்கிறார்.

மேலே போன பாரதி உங்க அப்பாவை பார்க்க தான் நானும் வந்திருக்கிறேன். அவர் வந்ததும் நானே உங்களை கூப்பிடுகிறேன் நீங்க போய் விளையாடுங்க என இரண்டு குழந்தைகளையும் அனுப்பி வைக்கிறார். பிறகு எல்லாரும் இங்கதான் இருக்கீங்களா விஐபி ஓட பிறந்த நாள் போல என சொல்கிறார். சரி உன் கிட்ட தனியா பேசணும் என கண்ணம்மாவை அழைக்கிறார் பாரதி.

இந்த நேரத்தில் வெண்பா உள்ளே வருகிறார். வெண்பாவை பார்த்த அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர். என்ன வெண்பா அழையா விருந்தாளியாக வந்து இருக்க என சௌந்தர்யா கேட்க கண்ணம்மா கூப்பிட்டு தான் வந்து இருக்கேன் என கூறுகிறார். பிறகு அகிலன் ஜெயில் வாழ்க்கை எப்படி இருந்துச்சு என கேட்க உடனே அஞ்சலி ஜெயில்லயும் மூணு வேலையும் பிரியாணிதான் போல கொஞ்சம் கூட கொழுப்பு குறையவே இல்ல என சொல்கிறார். நான் வெயிட்டை சொன்னேன் என சொல்கிறார்.

பிறகு பாரதி கண்ணம்மாவை அழைத்துச் சென்று கீழே பேச அப்போது ரகசியம் ஏதோ சொல்லணும்னு சொன்னியே என்னாச்சு என கேட்க ஏன்மா எனக்கு பிறந்த குழந்தை. நமக்கு பிறந்த இரண்டாவது குழந்தை என சொல்வதைக் கேட்டு பாரதி தெரியும் என கூறுகிறார். கண்ணம்மா எப்படி உங்களுக்கு தெரியும் என கேட்க உனக்கு பிரசவம் பார்த்ததே நான்தான். நீ என்கிட்டே வந்து எனக்கு பொறந்தது இரண்டு குழந்தை என்று சொன்ன. அப்போவே இன்னொரு குழந்தை ஹேமா தான் என்று சொல்லுவேனு தெரியும். என்கிட்ட இருந்து ஹேமாவை பிரிச்சு என் நிம்மதியை கெடுக்க நீ இப்படி எல்லாம் பண்ற என பாரதி சொல்கிறார்.

ஹேமாவை எங்கம்மா அனாதை ஆசிரமத்தில் இருந்து தான் தூக்கி வந்தார்கள் என தெரியும். அதை தெரிஞ்சுகிட்ட நீ ஏன்னா என் பொண்ணு தானு அளந்து விடுற என கூறுகிறார். ஹேமா என் பொண்ணு இல்லைன்னு என்ன ஆதாரம் இருக்கு என கேட்க ஆதாரம் இருக்கு எங்க அம்மா. எங்கம்மா பொய் சொல்லி குழந்தையை கூட்டிட்டு வர மாட்டாங்க. அது இரண்டும் ஒன்றாக இருந்தாலும் இது என் மருமகளோட குறைந்த இங்கதான் வளரும் என்று சொல்லி வளர்க்கிற தைரியம் அவங்க கிட்ட இருக்கு. ஒருவேளை எங்க அம்மா பொய் சொல்லி இந்த குழந்தையை தூக்கிட்டு வந்து என்கிட்ட கொடுத்து இருந்தாங்கன்னா என் வாழ்நாள் முழுவதும் அவங்கள மன்னிக்க மாட்டேன். அவங்க செய்தது மிகப்பெரிய நம்பிக்கை துரோகம். ஆனா அவங்க பண்ணியிருக்க மாட்டாங்க நீ எனக்கு நம்பிக்கை இருக்கு என கூறுகிறார்.

மேலும் பாரதி மேல நான் தான் லட்சுமியோட அப்பா நீ சொன்ன அடுத்த நிமிஷமே லட்சுமியை கூப்பிட்டு அம்மா சொல்ற மாதிரி நான் உன்னோட அப்பா இல்லைன்னு சொல்லி உங்க அப்பா இவர்தான் என அந்த வருணோட போட்டோவை காட்டுவேன் என சொல்கிறார். இதனால் கண்ணம்மா அதிர்ச்சி அடைகிறார். பாரதி மேலே சென்று விட கண்ணம்மா கதறி அழுகிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது. ‌‌

Bharathi Kannamma Serial Episode Update 23.02.22
jothika lakshu

Recent Posts

ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள லெஹங்காவில் மின்னிய ஜான்வி கபூர்… வைரலாகும் புகைப்படங்கள்!

பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…

3 hours ago

வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 பாகம் 3’ பணிகள் விறுவிறுப்பு!

தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…

3 hours ago

‘தமிழ் முருகன்’ படத்தில் தனுஷின் மிரட்டல் தோற்றம் வெளியீடு!

'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும்…

3 hours ago

“அமீர் கானால் கூட முடியாது!” – ‘ட்ரெய்ன்’ பட விழாவில் விஜய் சேதுபதியை புகழ்ந்து தள்ளிய மிஷ்கின்

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக…

4 hours ago

வெளியாகிறது ‘தி ஒடிஸி’ மேக்கிங் வீடியோ – எந்த ஓடிடியில் தெரியுமா?

ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள 'தி ஒடிஸி' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோமரின்…

4 hours ago

Don’t Trouble the Trouble Teaser

Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti

1 day ago