Venkat Prabhu's 'Chennai 28 Part 3' Gears Up for Production
தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய ‘சென்னை 600028’. முதல் பாகம் மட்டுமல்லாமல், அதன் இரண்டாம் பாகமும் ரசிகர்களிடம் அமோக வரவேற்பைப் பெற்று கல்ட் கிளாசிக் திரைப்படங்களின் பட்டியலில் இடம்பிடித்தது.
இந்நிலையில், ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த ‘சென்னை 28 பாகம் 3’ தற்போது அதிகாரப்பூர்வமாக உருவாகி வருகிறது. “The Boys Are Back” என்ற வாசகத்துடன், ‘ஷார்க்ஸ்’ அணியினர் மீண்டும் களமிறங்கத் தயாராகியுள்ளனர்.
படத்தின் திரைக்கதை எழுத்துப் பணிகள் அண்மையில் இலங்கையில் வெற்றிகரமாக நிறைவடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, படத்தின் அடுத்தகட்ட பணிகளுக்காக இயக்குநர் வெங்கட் பிரபு தாய்லாந்து சென்றுள்ளார்.
அங்கு படப்பிடிப்பிற்கான முக்கிய இடங்களைத் தேர்வு செய்யும் லொகேஷன் ஸ்கவுட்டிங் பணிகளில் அவர் ஈடுபட்டு வருகிறார். முதல் பாகத்தில் சென்னை தெருக்களிலும், இரண்டாம் பாகத்தில் கிராமப்புற பின்னணியிலும் கலக்கிய ‘ஷார்க்ஸ்’ அணி, இந்த முறை தாய்லாந்தை பின்னணியாகக் கொண்டு புதிய சாகசத்தில் ஈடுபடவுள்ளதாக கூறப்படுகிறது.
வழக்கமான வெங்கட் பிரபு பாணியில் நகைச்சுவை, நட்பு, கிரிக்கெட், கலாட்டா மற்றும் விறுவிறுப்பான சம்பவங்களுடன், முழு நீள கமர்ஷியல் எண்டர்டெய்னராக ‘சென்னை 28 பாகம் 3’ உருவாகவுள்ளது. விரைவில் படத்தின் நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் படப்பிடிப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…
வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…
ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…
அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…