அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல் நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

பிரபல இயக்குநர் பாலாஜி மோகன் இயக்கியுள்ள இந்தத் தொடரில், சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். May6 Entertainment Factory நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு நிர்மல் வில்லியம்ஸ் திரைக்கதை எழுதியுள்ளார். ஷரதா சுப்ரமணியன் மற்றும் ஸ்வேதா சக்ரவர்த்தி இணை எழுத்தாளர்களாக பணியாற்றியுள்ளனர்.

இந்தத் தொடரில் அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஜோடியாக நடித்துள்ளனர். இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி தொடரின் முக்கிய அம்சமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

FOUND மற்றும் Find My Bae எனும் இரண்டு பிரபல டேட்டிங் செயலிகளை மையமாகக் கொண்டு கதை நகர்கிறது. இந்த செயலிகளின் நிறுவனர்களான தாரா மற்றும் மேத்யூ, மற்றவர்களுக்கு சரியான துணையைத் தேர்ந்தெடுத்து கொடுப்பதில் திறமைசாலிகள். ஆனால் தங்களுக்கான காதலைத் தேடுவதில் இருவருமே தடுமாறுகின்றனர்.

போட்டியாளர்களாக சந்திக்கும் தாரா மற்றும் மேத்யூ இடையே உருவாகும் காதல், மோதல், நட்பு மற்றும் குடும்ப உறவுகளை நகைச்சுவையுடன் சொல்லும் கதையாக #Love உருவாகியுள்ளது.

இதுகுறித்து நெட்ஃப்ளிக்ஸ் இந்தியாவின் உள்ளடக்க துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் கூறுகையில், தென்னிந்திய கதைகளுக்கான முதலீட்டை நெட்ஃப்ளிக்ஸ் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், இன்றைய தலைமுறையினரின் காதலை பிரதிபலிக்கும் கதையாக #Love உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமியின் இயல்பான நடிப்பு கதைக்கு உயிர் கொடுத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

சௌந்தர்யா ரஜினிகாந்த் பேசுகையில், உறவுகளில் ஏற்படும் மாற்றங்களை உணர்வுப்பூர்வமாக சொல்லும் கதையாக இது உருவாகியுள்ளதாகவும், பாலாஜி மோகன் உருவாக்கிய கதாபாத்திரங்கள் குறைகளுடன் இருப்பதால் பார்வையாளர்கள் அவற்றுடன் எளிதில் கனெக்ட் ஆக முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

இயக்குநர் பாலாஜி மோகன் கூறுகையில், “காதல் மாறியிருக்கிறது, சந்திக்கும் முறை மாறியிருக்கிறது. ஆனால் உணர்வுகள் மாறவில்லை” என தெரிவித்துள்ளார்.

அப்படியானால் காதலில் முக்கியமானது கெமிஸ்ட்ரியா? கம்ஃபோர்ட்டா? என்பதற்கான பதிலை அக்டோபர் 2 முதல் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் #Love தொடரில் தெரிந்துகொள்ளலாம்.

Suresh

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

19 hours ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

19 hours ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

19 hours ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

19 hours ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

20 hours ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

20 hours ago