CM Vijay Is Doing a Great Job – Actor Nani
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கயாடு லோகர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும், கீர்த்தி சுரேஷ் சிறப்பு பாடல் ஒன்றில் நடனமாடியுள்ளார். இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் கவனம் பெற்ற நிலையில், படத்தின் புரமோஷன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நடிகர் நானி கலந்து கொண்டு பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், “‘தி பாரடைஸ்’ படத்திற்காக நான் மிகவும் எதிர்பார்ப்புடன் கடினமாக உழைத்துள்ளேன். எனவே, ரசிகர்களுக்கு ஒரு தரமான சம்பவம் காத்திருக்கிறது. தமிழ் சினிமா எனக்கு ஒரு பைபிள் போன்றது. கமல்ஹாசன், மணிரத்னம், பாரதிராஜா, பாக்யராஜ் உள்ளிட்ட ஜாம்பவான்களின் படைப்புகளைப் பார்த்துதான் சினிமாவை அணுகும் விதத்தை கற்றுக்கொண்டேன்” என்றார்.
மேலும் சென்னைக்கு வரும்போது சொந்த வீட்டிற்கு வருவது போன்ற உணர்வு ஏற்படுவதாகவும், சென்னையுடன் தனக்கு ஏதோ ஒரு முந்தைய பிறவி தொடர்பு இருப்பது போன்ற உணர்வு எப்போதும் இருப்பதாகவும் நானி தெரிவித்தார்.
தொடர்ந்து தமிழக முதலமைச்சர் விஜய் குறித்து பேசிய நானி, “விஜய் முதலமைச்சராக இருப்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. தமிழ்நாட்டு மக்கள் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கை மிகப்பெரியது. அதிக வசூல் செய்யும் நடிகர் என்பதற்காக மட்டுமே மக்கள் அவருக்கு வாக்களித்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. விஜய் நம்மில் ஒருவர் என்ற உணர்வை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளார்” எனக் கூறினார்.
மேலும், சட்டப்பேரவையின் சில வீடியோ காட்சிகளைப் பார்த்ததாகக் குறிப்பிட்ட நானி, “முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார்” என்றும் தெரிவித்தார்.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…