Dhanush's Powerful New Look from 'Tamil Murugan' Unveiled!
‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘வட சென்னை’, ‘அசுரன்’ உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘தமிழ் முருகன்’. இந்தக் கூட்டணியின் அடுத்த படமாக உருவாகி வரும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அறிவுமதி எழுதியுள்ள இந்தப் படத்தை தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் புரொடக்ஷன் மைல்ஸ் டு கோ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இசையமைப்பாளர் சாய் அபயங்கர் இசையமைக்கும் இப்படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் பிரம்மாண்ட திரைப்படமாகும்.
சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் அறிமுக வீடியோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது தனுஷின் கதாபாத்திர தோற்றத்தை அறிமுகப்படுத்தும் சிறப்பு வீடியோ படக்குழுவால் வெளியிடப்பட்டுள்ளது. இதில் தனுஷின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதற்கிடையில், ‘தமிழ் முருகன்’ திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதியும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருவது, படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj
Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan
Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…
En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…
பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…
Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…