Baakiyalakshmi Serial Episode Update 23.02.22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. மாமனாருக்கு சென்று காபி கொடுத்த பாக்கியா அதன் பின்னர் சமைக்கும் இடத்திற்கு சென்று வருகிறேன் என சொல்லிவிட்டு வருகிறார். அந்த நேரத்தில் இனியா புது டிரஸ் மேக்கப் போட்டு கீழே வர நீ என்னடி வீட்டிலேயே இப்படி டிரஸ் பண்ணிட்டு இருக்க என்ன விஷயம் என கேட்கிறார். நீ இன்னும் கிளம்பலையா போதுமா சும்மா ஏதாவது பேசிக் கொண்டே இருப்பேன் என பாக்கியாவை துரத்துவதில் குறியாக இருக்கிறார்.
பிறகு ஜெனி கீழே வர அவரிடம் வீட்டை பாத்துக்கோ நான் சமைக்கும் இடம் வரைக்கும் போயிட்டு வரேன் என சொல்கிறார். அதுமட்டுமல்லாமல் இனியா மேல ஒரு கண்ணு வச்சுக்கோ. அவ யார்கிட்டயாவது போன்ல பேசுராலானு பாரு என சொல்லிவிட்டு செல்கிறார்.
அதன்பிறகு ஜெனி பிசியோதெரபி ரஜினிகாந்த் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் வந்ததும் அவருடன் உள்ளே சென்று அவரிடம் தொடர்ந்து பேச்சு கொடுத்தவாரே இருக்கிறார். ஜெனியை அங்கிருந்து வெளியே அனுப்ப ஜெனி அக்கா அவருக்கு ஒரு காபி கொண்டு வாங்க என சொல்கிறார். ஜெனி அதெல்லாம் அப்புறம் கொடுக்கலாம் முதல்ல வேலையை முடிக்கட்டும் என்று சொல்கிறார்.
அதன் பிறகு பிசியோதெரபிஸ்ட் கிளம்பியதும் ஜெனி இனியாவை கூப்பிட்டு நீ எதுக்கு அவர் கிட்ட பேசிகிட்டே இருக்க? இந்த வயசுல எல்லாமே புடிக்கும் நான் உன்ன தப்பா சொல்லல ஆனா இதையெல்லாம் கடந்து நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொள்ளணும் என சொல்கிறார். என்னை இவ்வளவு அசிங்கமா சொல்லிட்டீங்க இல்ல என இனியா அழுது கொண்டே மேலே செல்கிறார்.
மேலே சென்ற இனியா அங்கு செழியன் இடம் ஜெனி அக்கா என்ன திட்டிட்டாங்க என சொல்கிறார். தாத்தாவுக்கு பிசியோதெரபி எப்படி பண்றாங்கனு பார்க்கத் தான் அங்கே நின்னுகிட்டு இருந்தேன். நீ எதுக்கு இங்க வர இங்கு எதுக்குன்னு கேட்டா என என்ன திட்டிட்டாங்க என சொல்ல செடியின் ஜெனியை கூப்பிட்டு திட்டுகிறார். ஜெனி சொல்வதை காதில் வாங்காமல் அவ என்ன பண்ணனும்னு அவளுக்கு தெரியும் என கூறுகிறார்.
அதன்பிறகு இரவு அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்கும் போது அப்போது கோபி இனியாவிடம் 11ஆம் வகுப்பில் என்ன குரூப் எடுக்க போற என கேட்கிறார். இனியா என்னை எடுப்பது என தெரியல நீங்களே சொல்லுங்க என சொல்லிக் கொண்டிருக்க அப்போது ஜெனி பிஸ்னஸ் மேக்ஸ் எடு என கூறுகிறார். ஜெனி பேச்சை கண்டுக்காத இனியா நீங்க சொல்லுங்க அப்பா என கூறுகிறார். மேலும் நான் அமெரிக்கா போகணும் என கூறுகிறார்.
இந்த நேரத்தில் பாக்கியா நீ கலெக்டராகு, எல்லாரும் உனக்கு சலாம் போடுவாங்க பெரிய வீடு கொடுப்பாங்க என சொல்ல நீ பெரிய வீட்ல இருக்க எல்லாம் என்னால கஷ்டப்பட்டு கலெக்டர் ஆக முடியாது என சொல்கிறார். பேஷன் டிசைனிங் பண்ணனும்னு தான் எனக்கு ஆசை என் இனியா சொல்கிறார். அப்ப நீ என் கூடவே படத்துல வேலை பண்ணு என எழில் சொல்கிறார். நாம சூட்டிங்க அமெரிக்காவில் வைச்சிக்கலாம் என சொல்ல நீ சம்பளமே கொடுக்க மாட்ட என கூறுகிறார்.
கோபி மேலே சென்றதும் பாக்கியா எதுக்கு ஜெனி பேசும்போது அவளை அவாய்ட் பண்ற என கேட்க டாடி கிட்ட பேசிட்டு இருக்கும்போது ஜெனி அக்கா எதுக்கு பேசணும் என கூறுகிறார். பிறகு இனியா மேலே சென்று விடுகிறார். உனக்கும் இனியாவுக்கு ஏதாவது பிரச்சனையா என கேட்க அதெல்லாம் எதுவும் இல்லை என ஜெனி சொல்ல செழியன் இவதான் இனியாவை இருக்கா என கூறுகிறார்.
இனியா ஏதாவது தப்பு பண்ணி இருப்பா அதனால தான் ஜெனி திட்டி இருப்பார் என பாக்கியா கூறுகிறார். அதன் பின்னர் மறுநாள் காலையில் ஈஸ்வரி சோபாவில் உட்கார்ந்து கொண்டிருக்க அப்போது எழில் அவருடைய தாத்தாவை குளிக்க வைத்து வெளியே கொண்டு வந்து அமர வைக்கிறார். இந்த நேரத்தில் கோபி வர கோபியை பார்த்த அவருடைய அப்பா கோபமடைகிறார்.
இதனால் கோபி மேலே எழுந்து சென்று விடுகிறார் நல்லா இருக்கும் போது தான் அவனை திட்டிக்கிட்டே இருந்தீங்க, இப்போ எதுக்கு அவனை பார்த்தா கடுகடுனு இருக்கிறீர்கள் என ஈஸ்வரி கேட்கிறார். எழிலுக்கு அவருடைய அப்பாவின் மீது சந்தேகம் வருகிறது. இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவரான ஜான்வி கபூர், தனது நடிப்பைத் தாண்டி ஸ்டைலிஷ் ஃபேஷன் தேர்வுகளாலும் ரசிகர்களின் கவனத்தை…
தமிழ் சினிமாவில் நட்பு, நகைச்சுவை மற்றும் தெருமுனை கிரிக்கெட்டை அழகாக பதிவு செய்த படங்களில் முக்கியமானது இயக்குநர் வெங்கட் பிரபு…
'பொல்லாதவன்', 'ஆடுகளம்', 'வட சென்னை', 'அசுரன்' உள்ளிட்ட வெற்றிப் படங்களுக்குப் பிறகு, இயக்குநர் வெற்றிமாறன் மற்றும் நடிகர் தனுஷ் மீண்டும்…
இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்துள்ள 'ட்ரெய்ன்' திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக…
ஹாலிவுட்டின் பிரபல இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கியுள்ள 'தி ஒடிஸி' திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹோமரின்…
Don’t Trouble the Trouble - Teaser (Tamil) | Fahadh Faasil | Ssara | Shashank Yeleti