bharathi kannamma and raja rani2 serial episode update 03-08-22
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களான பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி உள்ளிட்டவை இணைந்து ஒளிபரப்பாகி வருகின்றன
இன்றைய எபிசோடில் பாரதி நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் பேசிக் கொண்டிருக்க அப்போது அங்கு வந்த வெண்பா உன்னிடம் தனியாக பேச வேண்டும் என சொல்கிறார். பிறகு பாரதியின் தனியாக பேச என்ன வெண்பா சொல்லு என கேட்கிறார். உனக்கும் எனக்கும் இடையே இருந்த கசப்பான தருணங்களை எல்லாம் மறந்துவிடலாம். நீ இப்போ ஹேமாவோட அம்மாவா யார காட்டுவது என்று குழம்பி போய் இருக்கனு எனக்கு நல்லாவே தெரியும். நீ ஒன்னும் கவலைப்படாத ஹேமாவோட அம்மா நான் தானு சொல்லு. நீ இதை எப்படி என்கிட்ட கேட்கிறது என்று கூச்சப்படலாம். உனக்காக நான் எந்த உதவியும் செய்ய தயாராக இருக்கேன் என கூறுகிறார்.
பாரதி தனக்குள் இருக்கும் விஷயத்தை சொல்ல முற்படும்போது வெண்பா நீ எதுவும் சொல்லாத நான் தான் அம்மான்னு சொல்லு ஒன்னும் கவலைப்படாத என சொல்கிறார். பாரதியும் எதுவும் பேச முடியாமல் சரியென தலையாட்டி விடுகிறார். அதன் பின்னர் பங்ஷன் தொடங்கி சரவணன் சந்தியா கேக் வெட்டி கல்யாண நாளை கொண்டாடுகின்றனர். அடுத்ததாக ஹேமா லட்சுமியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்கிறது.
பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு பாரதி வந்த எல்லோருக்கும் நன்றி நீங்க எல்லோரும் கண்டிப்பாக சாப்பிட்டுவிட்டு தான் போகணும் என பேசிக் கொண்டிருக்க அப்போது குறிப்பிட்ட ஹேமா இன்னைக்கு அம்மாவ காட்டுறதா சொன்னிங்க எங்க அம்மா காட்டுங்க என கேட்கிறார். கண்டிப்பா இன்னைக்கு உங்க அம்மாவ காட்டுவேன் என பாரதி சொல்லிவிட்டு எல்லோரிடமும் இன்னைக்கு தான் முதல்முறையா ஹேமா அவளுடைய அம்மாவை பார்க்க போகிறாள். அவங்க அம்மாவ இங்க எல்லோரும் முன்னாடி இருந்தால் அவளுக்கு காட்டப்போகிறேன். ஒரு இரண்டு நிமிடம் என சொல்லிவிட்டு உள்ளே செல்கிறார் பாரதி.
இதனால் வெண்பா உட்பட பாரதி யாரை அம்மாவாக காட்டப் போகிறான் என குழம்பி போகின்றனர். கண்ணம்மா வெண்பாதான் அம்மானு சொல்லட்டும் அப்புறம் என்னுடைய ருத்ர தாண்டவத்தை பார்ப்பாரு என மனதுக்குள் சொல்லிக் கொண்டிருக்க கையில் ஒரு கிப்ட்டுடன் பாரதி மேடைக்கு வருகிறார்.
மேடைக்கு வந்த பாரதியிடம் ஹேமா என்ன டாடி இது அம்மாவோட போட்டோவ என கேட்க ஆமாம் இந்தா இதை நீயே பிரிச்சு பாரு என கொடுக்கிறார். இத்துடன் இன்றைய பாரதிகண்ணம்மா மற்றும் ராஜா ராணி மெகா சங்கத்தின் முதல் பாதி எபிசோடு முடிவடைகிறது.
அடுத்து ஹேமா போட்டோவை திறக்கையில் பாரதி கல்லூரி படிக்கும் போது காதலித்த ஹேமாவை வரைந்து இதுதான் அம்மா என காட்டியது தெரிய வருகிறது. ஆனால் இதுதான் என்னுடைய அம்மாவா ரொம்ப அழகா இருக்காங்க என உண்மை தெரியாத ஹேமா அந்த போட்டோவை கட்டிப்பிடித்து அழுகிறார். பிறகு அந்த போட்டோவை எல்லோருக்கும் காட்ட அனைவரும் அதிர்ச்சடைகின்றனர்.
அதன் பிறகு பாரதி எல்லோருக்கும் நன்றி என அனைவரையும் சாப்பிட போகச் சொல்கிறார். இந்த நேரத்தில் கண்ணம்மா எல்லோரும் ஒரு நிமிஷம் இருங்க என அனைவரையும் உட்கார வைத்துவிட்டு ஹேமா மற்றும் லட்சுமி சாப்பிட அஞ்சலியுடன் அனுப்பி வைத்துவிட்டு நான் பொறுத்ததெல்லாம் போதும் நிறைய பேச வேண்டி இருக்கு என கூறுகிறார். நீங்க பேச என்ன இருக்கு என பாரதி கேட்க உங்களுக்கு தெரியாத பல உண்மைகள் இருக்கு என கூறுகிறார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்க பிறகு சரி பேசு என தான் பேசுறேன்னு நானும் கேட்கிறேன் என கூறுகிறார் பாரதி.
பிறகு கண்ணம்மா நீங்க ஹேமாவோட அம்மானு காட்டுனீங்களே அவங்க உண்மையாவே அவளோட அம்மாவா உங்க மனசாட்சி தொட்டு சொல்லுங்க என கேட்க பாரதி இல்ல ஹேமா பத்தி நான் சில உண்மைகளை சொல்ல வேண்டி இருக்கு என கூறுகிறார். ஹேமா எனக்கு பிறந்த குழந்தையே கிடையாது. அவள் ஒரு அனாதை ஆசிரமத்தில் இருந்து தான் தூக்கிட்டு வந்து வளர்த்துக்கிட்டு இருக்கோம். என் வாழ்க்கையில ஒரு பிடிப்பில்லாமல் நான் உடைந்து போய் இருந்தபோது என் வீட்டுக்கு வந்தவ தான் ஹேமா. அவளை என் பொண்ணு மாதிரி நினைத்து தான் வளர்த்துக்கிட்டு இருக்கேன் என கூறுகிறார். இதைக் கேட்டு சந்தியா சரவணன் குடும்பத்தினர் எல்லோரும் அதிர்ச்சடைகின்றனர். கண்ணம்மா பாரதி முறைத்து பார்க்க இத்துடன் இன்றைய பாரதி கண்ணம்மா சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…
7 Star Boys Official Trailer | Antony Varghese | Nikhil Premraj | Jakes Bejoy |…
Avengers Endgame: Encore Official Tamil Trailer I In Cinemas Sep 25
‘ராக்கிங் ஸ்டார்’ யஷ் நடிப்பில் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், ஆக்ஷன் மற்றும் மாஸ் காட்சிகளால் ரசிகர்களை கவரும்…
தென்னிந்திய சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும், தனக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தையும் கொண்டவராகவும் திகழ்பவர் நயன்தாரா. அழகு, கம்பீரம், துணிச்சல் என…
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை கொண்ட நடிகை திரிஷா, தொடர்ந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். பல…