baakiyalakshmi serial episode-update
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எழில் ஜெனியை கூட்டிக்கொண்டு செழியன் வெளியே சென்றுள்ள விஷயத்தை சொல்ல பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். எழிலை பிடித்து திட்டிக் கொண்டிருக்க ஜோசப் வர உடனே பேச்சை அடக்கி விடுகிறார்.
ஜோசப் ஜெனி மற்றும் கார் இல்லாததை பார்த்து செடியின் இல்லாததையும் நோட் பண்ணி நேராக பாக்கியா மற்றும் எழிலிடம் வந்து எங்க ஜெனி செழியன் காணும் என்ன பண்றீங்க என்று கேள்வி கேட்க செழியன் ஜெனியிடம் பேசுறதுக்காக கூட்டிட்டு போயிருக்கான், அவ வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவான் நீங்க பயப்படாம போங்க என்று சொல்கிறார்.
கோர்ட்டில் வைத்து என் பொண்ணு கடத்தி இருக்கிறீர்களா இதை வைத்து நான் போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுத்து செழியனை உள்ள தள்ள கூட முடியும் என வார்னிங் கொடுக்கிறார். இங்கே செழியன் ஜெனியிடம் பேச முயற்சி செய்ய ஜெனி கார நிறுத்து என திட்டி காரில் இருந்து கீழே இறங்கி விடுகிறார்.
செழியன் செய்த தவறுக்காக மன்னிப்பு கேட்டு பேச முயற்சி செய்ய ஜெனி என்ன வீட்ல கொண்டு போய் விடு என சொல்லிக் கொண்டே இருக்கிறார். இனிமே எல்லாமே அவ்வளவுதானா என்று சொல்லி சொல்லி ஜெனியை கூட்டி சென்று வீட்டில் விடுகிறார்.
மறுபக்கம் பாக்யாவுக்கு அமைச்சர் ஆபீஸில் இருந்து போன் வருகிறது இன்னும் ஒரு மணி நேரத்தில் அமைச்சர் உங்கள பாக்கணும்னு சொல்லி வர சொன்னதாக சொல்ல பாக்கியாவும் எழிலும் கிளம்பி செல்கின்றனர்.
ஜெனி வீட்டுக்கு வந்ததும் உள்ளே போக முயற்சி செய்ய செழியன் அப்போதும் தடுத்து நிறுத்தி பேச முயற்சி செய்ய நான் என்ன பண்ணட்டும் சொல்லு என கேட்டேன் ஆட்டோவில் வந்து இறங்கும் ஜோசப் செத்துப் போ என கூறுகிறார். இன்னொரு முறை ஜெனி பக்கம் நீ வரக்கூடாது என்று சொல்ல நான் ஜெனி கிட்ட பேச திரும்பத் திரும்ப முயற்சி பண்ணிக்கிட்டே தான் இருப்பேன் என செழியன் சொல்ல செழியனை அடிக்க கை ஓங்குகிறார் ஜோசப். இடையில் வந்து தடுத்து நிறுத்துகிறார் ஜெனி. பிறகு அப்பாவை கூட்டிக்கொண்டு வீட்டிற்குள் செல்கிறார்.
இங்கே அமைச்சரை பார்க்க வந்த பாக்யாவுக்கு அவர் அடுத்த வாரம் மூணு நாள் நீங்க திருச்செந்தூரில் இருக்கிற மாதிரி பிளான் பண்ணிடுங்க உங்க டீம் எல்லாரையும் சேர்த்து தான் சொல்றேன் என்னோட கட்சி மீட்டிங் நடக்க போகுது அதுக்கு நீங்கதான் கேட்டரிங் பண்ணனும் என சொல்கிறார். அவ்ளோ பேருக்கு சமைத்து பரிமாற அளவுக்கு எங்க கிட்ட ஆள் இல்லை என்று சொல்ல உங்களுக்கு எவ்வளவு ஆள் தேவையோ அதை நாங்க ஏற்பாடு பண்ணி தரோம், நீங்க சமைக்கிறதை மட்டும் பாருங்க என கேட்டரிங் ஆர்டர் கொடுக்கிறார். இதனால் பாக்கியா சந்தோஷப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
Mookuthi Amman 2 Maha Sakthi Teaser (Tamil) | Nayanthara | Sundar C | Hiphop Tamizha…
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…