பாட்டி போட்ட பிளான். அதிர்ச்சியில் விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. ‌ இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் மீனா காரில் வரும்போது நாற்று நடுவதையும் கொக்கு பறப்பதையும் பார்த்து ஆச்சரியமாக பேசி வர விஜயா கடுப்பாகிறார். கொஞ்சம் அமைதியா வா தலை வலிக்குது என கோபப்பட அண்ணாமலை இதெல்லாம் பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷமா இருக்கு உனக்கு எப்படி தலை வலிக்குது என மூக்கை உடைக்கிறார்.

இன்னொரு பக்கம் ஸ்ருதி என்னப்பா இந்த ஊரு இப்படி இருக்கு சௌகரியமா இருக்குமா என்று கேட்க மனோஜ் வீடு எல்லாம் பெருசா இருக்காது சின்னதா தான் இருக்கும் என சொல்கிறார். ரோகினி நம்ம ஊரு காரங்க பாத்துட்டா என்ன ஆகிறது என பதற்றத்துடன் வர மனோஜ் என்னாச்சு என்று கேட்க ஒன்றும் இல்ல என சொல்லி சமாளித்து விடுகிறார்.

பிறகு எல்லோரும் வீட்டுக்கு வந்து இறங்க நாச்சியார் பாட்டி சந்தோஷப்படுகிறார். ஊர்க்காரர் வந்து முத்து மீனாவை நலம் விசாரிக்க அதை பார்த்து விஜயாவும் ரோகிணியும் கடுப்பாகின்றனர். விஜயா ரோகினியை கூப்பிட்டு உங்க மாமா எப்ப வருவாரு அவர் டீ குடிப்பாரா காபி குடிப்பாரா சைவமா அசைவமா? என கேள்வி மேல் கேள்வி கேட்க முதல்ல அவரு வரட்டும் அப்புறம் பாத்துக்கலாம் என சொல்லி விடுகிறார் ரோகினி.

காய்கறி எல்லாம் வந்ததும் விஜயா மீனாவை கூப்பிட்டு ரோகிணிக்கு இது பிடிக்கும் இது பண்ணிடு ஸ்ருதிக்கு அது பிடிக்கும் அதை பண்ணிடு என ஹோட்டல் மெனு போல லிஸ்ட்டை அடுக்கிக் கொண்டே போக இது எல்லாம் பார்த்த நாச்சியார் விஜயாவுக்கு செக்மேட் வைக்க பிளான் போடுகிறார். அது என்ன மீனா தான் சமைக்கணுமா என்று கேட்க அவ தான் எங்க வீட்டிலயும் எல்லா வேலையும் செய்வா என்று சொல்கிறார். அவளும் என் மருமகள் தானே நான் சொல்றத செய்ய போறா என சொல்கிறார்.

உடனே நாச்சியார் பாட்டி அதுவும் சரிதான் அவ உன் மருமக நீ சொல்றத செய்வா இப்போ எனக்கு நீதான் மருமக அப்ப நீ தானே எல்லா வேலையும் செய்யணும் என சொல்ல விஜயா அதிர்ச்சி அடைகிறார். என்னது நான் சமைக்கணுமா என்று கேட்க நாச்சியார் பாட்டி ஆமா நீ தான் சமைக்கணும் கூட ரோகிணியும் ஸ்ருதியும் உதவிக்கு வச்சுக்க என சொல்ல அவர்களும் அதிர்ச்சி அடைகின்றனர்.

நாச்சியார் பாட்டி இருவரையும் கூப்பிட்டு வேலை செய்ய சொல்ல அதான் மீனா இருக்காங்களே அவங்க செஞ்சுப்பாங்க என்று சொல்ல எல்லாரும் செய்யணும் நீங்களும் சமையல் கத்துக்கணும் என ஆர்டர் போடுகிறார். ரோகினியை மசாலா அரைக்க சொல்லியும் ஸ்ருதியை காய்கறி வெட்ட சொல்லியும் வேலை கொடுக்கிறார். ரவி நான் சமைக்கிறேன் என்று சொல்ல மனோஜ் ரோகினிக்கு அதெல்லாம் செட் ஆகாது அனல்ல வேர்த்து போகும் என்று சொல்ல பாட்டி இருவரையும் கூப்பிட்டு முதுகில் ஒரு அடி போட்டு போய் ஊரை சுத்துங்கடா என துரத்தி விடுகிறார்.

அதன் பிறகு ரோகினி அம்மியில் மசாலா அரைக்க ஸ்ருதி காய்கறி வெட்ட தெரியாமல் கண்டபடி வெட்ட கையில் லேசாக கட் செய்து கொண்டு அய்யோ அம்மா என கத்தி கூப்பாடு செய்கிறார். ஹாஸ்பிடல் போயிட்டு வந்துடலாம் என்று சொல்லி கூப்பிட பாட்டி அதெல்லாம் எதுக்கு சுண்ணாம்பு வச்சா சரியா போயிடும் என சுண்ணாம்பு தடவி விடுகிறார்.

விஜயா ரோகினியையும் சுருதியையும் உதவிக்கு வைத்துக்கொண்டு சமையல் வேலையை செய்து முடிக்கிறார். மீனா நான் போய் உதவி செய்கிறேன் என ஒவ்வொரு முறையும் எழுந்து வர நாச்சியார் பாட்டி இழுத்து உட்கார வைக்கிறார். அதன் பிறகு எல்லோரும் சாப்பிடுவதற்காக உட்கார மீனா நாங்க எல்லாரும் சாப்பிட்ட பிறகு கடைசியா தான் சாப்பிடுவா என்று விஜயா செல்ல பாட்டி அதனால தான் அவளை முதல்ல உட்கார வைத்து இருக்கேன். எல்லாருக்கும் பரிமாறு என சொல்ல விஜயாவும் பரிமாறுகிறார்.

ஸ்ருதி கையில் கிழித்துக் கொண்டதால் சாப்பிட கஷ்டப்பட விஜயா ஊட்டி விட 11 தட்டு வேலை செய்யுது, மலேசியாவில் இருந்து 101 தட்டு வந்தா ஊட்டி விடுற கை இந்த பக்கம் வந்துடும் என சொல்ல விஜயா ஸ்ருதிக்கு ஊட்டி விடுவதை மீனா ஏக்கமாக பார்ப்பதை கவனிக்கிறார் பாட்டி. உடனே மீனாவை போய் ஸ்ருதி பக்கத்தில் உட்கார சொல்கிறார். இதனால் விஜயா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது

sirakadikka-aasai serial episode-update
jothika lakshu

Recent Posts

Naan Ratchasan Lyrical Video

Naan Ratchasan Lyrical Video | Cottage | Naveen | Aria | Senthamizh | Sathish Geetha…

19 hours ago

Baasha Da Video Song

Baasha Da Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity Mukhundhan | Govind…

19 hours ago

Thangam Thangam Lyrical Video

Thangam Thangam Lyrical Video | Enemy Of The Smuggler | Nithyasree Krishnan | Sam Daniel

19 hours ago

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

2 days ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

2 days ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

2 days ago