Arya and Regina Cassandra Make Their Television Debut!
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர், தற்போது சின்னத்திரை நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகக் களமிறங்குகிறார். அவருடன் பிரபல நடிகை ரெஜினா கசாண்ட்ராவும் நடுவராகப் பங்கேற்கிறார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ள ‘மாஸ் பசங்க Vs கிளாஸ் பொண்ணுங்க’ நிகழ்ச்சியின் தொடக்க விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட ஆர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா, நிகழ்ச்சி குறித்த பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் போட்டியாளர்களாகப் பங்கேற்கின்றனர். தங்களின் தனித்துவமான ஸ்டைல், ஆளுமை மற்றும் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் போட்டியாளர்கள் களமிறங்க உள்ளனர்.
நிகழ்ச்சி குறித்து நடிகர் ஆர்யா பேசுகையில், “இது 100 சதவீதம் மகிழ்ச்சிக்கும் பொழுதுபோக்கிற்கும் முக்கியத்துவம் அளிக்கும் நிகழ்ச்சி. ஆண், பெண் பிரபலங்கள் மிகவும் சுவாரஸ்யமாகப் போட்டியாளர்களாகக் களமிறங்குகின்றனர். மாஸ் பசங்களும் கிளாஸ் பொண்ணுங்களும் தங்களின் ஸ்டைல், திறமை, உணர்வுகள் என அனைத்தையும் வெளிப்படுத்தப் போகிறார்கள்.
இது வெறும் போட்டி மட்டுமல்ல. சந்தோஷம், நட்பு மற்றும் மகிழ்ச்சியான தருணங்கள் நிறைந்த நிகழ்ச்சியாக இருக்கும்” என்று தெரிவித்தார்.
ஆர்யா மற்றும் ரெஜினா கசாண்ட்ரா நடுவர்களாக இணைந்துள்ள இந்த நிகழ்ச்சி, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…
ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின்…