ஜெயிலர் 2 முன்பதிவில் இத்தனை கோடி வசூலா? ரஜினி ரசிகர்கள் உற்சாகம்

நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.

கடந்த 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகத்திற்கும் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில், ‘ஜெயிலர் 2’ படத்தின் டிக்கெட் முன்பதிவு சமீபத்தில் ஆன்லைனில் தொடங்கியது.

முன்பதிவு தொடங்கிய சில மணி நேரங்களிலேயே தமிழ்நாடு மட்டுமின்றி, கர்நாடகா, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலும், அமெரிக்கா மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளிலும் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையானதாகக் கூறப்படுகிறது.

இதற்கிடையே, வெளியீட்டுக்கு முந்தைய டிக்கெட் முன்பதிவு மூலமாகவே ‘ஜெயிலர் 2’ திரைப்படம் ரூ.11 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த வசூல் குறித்த தகவல் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.

மேலும், தொடர் விடுமுறை நாட்கள் படத்தின் வசூலுக்கு சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்ற நிலையில், சில தினங்களுக்கு முன்பு வெளியான டிரெய்லரும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.

முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெளியாகவுள்ள ‘ஜெயிலர் 2’, வசூலில் புதிய சாதனைகளைப் படைக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Suresh

Recent Posts

Ranabaali Official Trailer

Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul

3 minutes ago

Aathi Iva Yarraa Lyric Video

Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…

7 minutes ago

Terror Error Lyrical Video

Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…

10 minutes ago

சின்னத்திரையில் களமிறங்கும் ஆர்யா, ரெஜினா கசாண்ட்ரா!

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…

1 hour ago

‘ஐ ஆம் கேம்’ படத்தின் தோல்விக்கு நானே பொறுப்பேற்கிறேன்! – துல்கர் சல்மான்

‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…

1 hour ago

‘இந்தியன் 3’ படத்தின் பணிகள் தொடக்கம்.. போஸ்டர் வெளியிட்டு அறிவித்த லைகா புரொடக்ஷன்ஸ்!

ஷங்கர் – கமல்ஹாசன் கூட்டணியில் கடந்த 1996-ம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘இந்தியன்’. ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின்…

2 hours ago