It’s Rare to Find a Good Human Being Like Prabhas – Jitin Gulati
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த வகையில், தற்போது ‘ஃபௌசி’ திரைப்படத்தில் நடிகர் ஜிதின் குலாட்டியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
பிரபாஸுடன் சுமார் இரண்டு ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அனுபவம் குறித்து ஜிதின் குலாட்டி அளித்த பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
பிரபாஸ் மிகவும் தாராளமானவர் என்றும், சிறந்த மனிதர் என்றும் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்ததாகக் கூறிய அவர், அவருடன் நேரடியாகப் பணியாற்றத் தொடங்கிய பிறகு அந்த வார்த்தைகள் உண்மை என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததாக தெரிவித்துள்ளார்.
“பிரபாஸ் மிகவும் இனிமையானவர், தாராளமானவர். யார் உதவி கேட்டாலும் அவர்களுக்கு உதவ தயாராக இருப்பார். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவருடன் படப்பிடிப்பில் இருக்கிறேன். அவரைச் சுற்றியுள்ள பலருக்கு அவர் உதவுவதை நேரில் பார்த்திருக்கிறேன். பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது” என ஜிதின் குலாட்டி தெரிவித்துள்ளார்.
மேலும், பிரபாஸின் வீட்டில் சமைக்கப்படும் உணவையும் தான் சாப்பிட்டுள்ளதாகக் கூறிய அவர், குறிப்பாக மட்டன் மிகவும் சிறப்பாக இருந்ததாக தெரிவித்துள்ளார்.
“பிரபாஸ் வீட்டில் சமைக்கும் உணவுக்காகவும் பிரபலமானவர். அவரது வீட்டில் சமைத்த உணவை நானும் சாப்பிட்டிருக்கிறேன். குறிப்பாக அந்த மட்டன், நான் இதுவரை சாப்பிட்டதிலேயே மிகச் சிறந்தது. இதை மிகைப்படுத்திச் சொல்லவில்லை; அனுபவித்து சொல்கிறேன்” என அவர் கூறியுள்ளார்.
பிரபாஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஃபௌசி’ திரைப்படம் மீது ரசிகர்கள் மத்தியில் ஏற்கனவே அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ‘சலார்’, ‘கல்கி 2898 AD’, ‘தி ராஜா சாப்’ உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து அடுத்தடுத்து பிரம்மாண்ட படங்களில் நடித்து வரும் பிரபாஸை, அவரது நட்சத்திர அந்தஸ்தை தாண்டி தனிப்பட்ட முறையிலும் ஜிதின் குலாட்டி பாராட்டியிருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…
நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…
நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…
தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…
Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar
Vaan Meeru Video Song | Enna Vilai | Karunaas | Nimisha | Sam CS |…