Have Fan Clubs Been Formed Jason Sanjay Issues Clarification
தமிழக முதலமைச்சர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய், ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார். இதற்கிடையே விரைவில் கதாநாயகனாகவும் களமிறங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், ஜேசன் சஞ்சய் பெயரில் ரசிகர் மன்றங்கள் தொடங்கப்பட்டுள்ளதாகவும், தமிழகம் முழுவதும் ரசிகர் மன்ற நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் சமூக வலைத்தளங்களில் தகவல்கள் பரவின. இது பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது ஜேசன் சஞ்சய் இதற்கு மறுப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், “சமூக வலைத்தளங்களில் எனது அதிகாரப்பூர்வ கணக்குகளைத் தவிர, எனது பெயர், புகைப்படம் அல்லது அடையாளத்தைப் பயன்படுத்தி செயல்படும் பிற கணக்குகள் மற்றும் பக்கங்கள் அனைத்தும் போலியானவை.
அத்தகைய கணக்குகள் மூலம் வெளியிடப்படும் பதிவுகள், கருத்துகள், நேரடிச் செய்திகள் மற்றும் வணிகத் தொடர்புகளுக்கு நான் எந்த வகையிலும் பொறுப்பல்ல. மேலும், நாங்கள் எந்தவொரு அதிகாரப்பூர்வ ரசிகர் மன்றத்தையோ அல்லது சமூகக் குழுவையோ தொடங்கவில்லை. அதற்கு எந்த அனுமதியும் வழங்கவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Arikomban Official Teaser | Mithun Maheshwaran | Sagishna Xavier
SAAMI AZHAIPPU LYRICAL VIDEO | VETTA SAAMI | ARULNITHI, AMEER | GHIBRAN | VILLUPATTU MADHAVI…
Thangapulla Video Song | Thagappan | Jiiva | Rajisha | Marshall Robinson | Ra.Venkat |…
Radhe Radhe Lyrical Video | AOT | Dulquer Salmaan | Ruhani Sharma | GV Prakash…
Devatha Odittalaa Lyrical Video | Marriage Story | Sunil Dev | Saran Raghavan | Sathyaprakash…