பாக்கியாவின் வளர்ச்சியை பார்த்து புலம்பும் கோபி. ஈஸ்வரி சொன்ன வார்த்தை. இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமாக சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோட்டில் ஆபிஸை இழுத்து மூடிய கோபி தன்னுடைய பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து ஆபீஸிலிருந்து பிரியாவிடை பெறுகிறார்.

மறுபக்கம் பாக்கியா, எழில், ராமமூர்த்தி ஆகியோர் ரெஸ்டாரண்டை வாடகைக்கு எடுப்பதற்காக அட்வான்ஸ் கொடுக்க ஹோட்டல் ஒன்றில் காத்திருக்கின்றனர். மிகுந்த மன வருத்தத்துடன் கோபி வீட்டுக்கு வர ராதிகா என்ன கோபி சீக்கிரமா வந்துட்டீங்க வேலை சீக்கிரமாக முடிஞ்சிடுச்சா ரொம்ப டயர்டா இருக்கீங்க வேலை ஜாஸ்தியோ கஷ்டப்பட்டு எல்லாம் வேலை செய்யாதிங்க என்று பேசி நான் காபி எடுத்துட்டு வரேன் என கிச்சனுக்குள் செல்கிறார்.

என்னைக்குமே வேலையை பத்தி கேட்க மாட்டா இன்னைக்கு வேலையை பத்தி கேட்கிறா, இவளுக்கு மட்டும் உண்மை தெரிந்தால் என்ன ஆகும் என கோபி புலம்புகிறார். இங்கே பாக்கியா அட்வான்ஸ் கொடுத்து அக்ரிமெண்டில் கையெழுத்து போட்டு வீட்டிற்கு வருகின்றனர்.

எழில் எல்லார்கிட்டயும் விஷயத்த சொல்ல வேண்டாமா என்று கேட்க பாக்யா இப்போ வேண்டாம் என சொல்ல அது எப்படிமா இவ்வளவு பெரிய சந்தோஷமான விஷயத்தை எல்லாருக்கும் சொல்லனும்ல என்று மொத்த பேரையும் கீழே வர வைக்கிறார். அம்மா ஒரு சந்தோஷமான விஷயம் சொல்ல போறாங்க என்று சொல்ல ஈஸ்வரி என்ன விஷயம் என்று கேட்க ரெஸ்டாரண்டுக்கு அட்வான்ஸ் கொடுத்த விஷயத்தை சொல்ல அனைவரும் சந்தோஷப்படுகின்றனர். பாக்கியாவின் வளர்ச்சி கண்டு கோபி அதிர்ச்சி அடைகிறார்.

செழியன், அமிர்தா, இனியா என எல்லோரும் பாக்யாவுக்கு வாழ்த்து சொல்ல ஈஸ்வரி எதுவும் சொல்லாமல் நிற்க பாக்யா அத்த நீங்க எதுவுமே சொல்லலையே என்று கேட்க உன்னால முடியுமா பாக்கியா? வீட்ல இவ்வளவு பிரச்சனை போயிட்டு இருக்கு என்று கேட்க நானும் வேண்டாம் என்று தான் சொன்னேன் என்று கூறுகிறார். உடனே எழில் அம்மா வேணான்னு தான் சொன்னாங்க நானும் தாத்தாவும் தான் கம்பெல் பண்ணி கூட்டிட்டு போனோம் என்று கூறுகிறார்.

ராமமூர்த்தி இதைவிட எவ்வளவு பெரிய பிரச்சனை எல்லாம் இந்த வீடு பார்த்து இருக்கு அப்பெல்லாம் அவ பிசினஸ் கவனிக்கலையா? அதெல்லாம் பாக்கியா நல்லபடியா பார்த்துக்குவா என்று கூறுகிறார். பிசினஸ்னாலே என்னன்னு தெரியாம தொழில் ஆரம்பிச்ச ஆனா இன்னைக்கு பிசினஸ் எப்படி பண்ணனும்னு உங்கிட்ட கத்துக்கிற அளவுக்கு வளர்ந்து இருக்க ரொம்ப சந்தோஷம் என ராமமூர்த்தி பாராட்டுகிறார்.

இனியா நீ தான் என்னுடைய இன்ஸ்பிரேஷன் என்று சொல்ல கோபி இதே வார்த்தையை இனியா தன்னிடம் சொன்னதை நினைத்து பார்க்கிறார். அடுத்து செழியன் ஜெனிக்கு பொக்கே உடன் சாரி என்று போஸ்ட் கார்டு அனுப்ப அதை பார்த்த ஜோசப் இந்த விஷயம் ஜெனிக்கு தெரியக்கூடாது என குப்பைத் தொட்டியில் தூக்கி வீசுகிறார்.

தனது நண்பனுடன் பாருக்கு வந்த கோபி நான் ஒன்னும் இல்லாம போனது கூட எனக்கு கவலை இல்லை ஆனால் பாக்கியா ரெஸ்டாரன்ட் தொடங்கும் அளவுக்கு வளர்ந்து இருக்கா அதை பார்க்கும்போது எனக்கு பொறாமையாகவும் வயித்தெரிச்சலாகவும் இருக்கு என புலம்பித் தள்ளுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

baakiyalakshmi-serial episode-update
jothika lakshu

Recent Posts

தி டார்க் ஹெவன் திரை விமர்சனம்

7 ஆண்டுகளுக்கு ஒருமுறை... அதுவும் ஜூன் மாதத்தில் மட்டும்! மேக்கரை என்ற மலைக்கிராமத்தில் சில ஆண்கள் மர்மமான முறையில் உயிரிழக்கின்றனர்.…

14 hours ago

பாரிஸ் கபே திரை விமர்சனம்

வெளிநாட்டில் தங்கி வேலை தேடி வரும் அர்ச்சனாவுக்கு ஒருவழியாக வேலை கிடைக்கிறது. இந்த மகிழ்ச்சியான செய்தியை சொந்த ஊரில் இருக்கும்…

14 hours ago

முதலமைச்சர் விஜய் கலக்கி கொண்டிருக்கிறார் – நடிகர் நானி!

இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் நானி நடித்துள்ள ‘தி பாரடைஸ்’ திரைப்படம் வரும் 24-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.…

15 hours ago

வேப்பிலை ஆடை அணிந்து நடித்த ஹர்சத் கான் – வெட்கத்தில் குலுங்கி சிரித்த ‘மீசைய முறுக்கு 2’ கதாநாயகிகள்!

ஹிப் ஹாப் ஆதி இயக்கி கதாநாயகனாக நடித்துள்ள ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தில் ரம்யா ரங்கநாதன், கெட்டிகா ஷர்மா, சைத்ரா…

15 hours ago

‘ஒன்றா ரெண்டா’ – 25 ஆண்டுகால திரைப்பயணத்தை கொண்டாடும் கௌதம் வாசுதேவ் மேனன்!

இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் 25 ஆண்டுகால சினிமா மற்றும் இசைப் பயணத்தைக் கொண்டாடும் வகையில், ‘ஒன்றா ரெண்டா –…

15 hours ago

அர்ஜுன் தாஸ், ஐஸ்வர்யா லட்சுமியின் ‘லவ்’ வெப் தொடர் ஓடிடியில் வெளியாவது எப்போது?

அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி இணைந்து நடித்துள்ள புதிய வெப்தொடர் #Love வரும் அக்டோபர் 2-ம் தேதி முதல்…

15 hours ago