baakiyalakshmi serial episode update 02-10-23
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்றைய எபிசோட்டில் இனியா நிலா பாப்பாவுக்கு சாப்பாடு ஊட்டிக் கொண்டிருக்க நிலா தண்ணீர் கேட்பேன் அதை எடுப்பதற்காக இனியா உள்ளே வந்த நேரத்தில் நிலா பாப்பா வெளியே ஓடி விடுகிறார்.
நிலா காணாமல் போன விஷயம் தெரிந்து வீட்டில் உள்ள எல்லோரும் அதிர்ச்சி அடைந்து வெளியே தேட செல்லும் போது அப்போது திடீரென நடிகர் சித்தார்த்துடன் நிலா பாப்பா வீட்டிற்கு வருகிறது. நிலாவை பார்த்ததில் அமிர்தா கண்ணீருடன் கட்டியணைத்துக் கொள்ள சித்தார்த் அந்த குழந்தைக்கு ஒன்னும் இல்லையே அழாதீங்க என ஆறுதல் கூறுகிறார்.
பிறகு பாக்கியா சித்தார்த்தை வீட்டிற்குள் அழைத்து வந்து அவரது குடும்பம் பற்றி விசாரிக்க சித்தா பட ப்ரமோஷன் பற்றி பேசுகிறார். அதன் பிறகு இனியா காலேஜ் கிளம்பியதும் பாக்கியா ஈஸ்வரியிடம் இனி நான் காலேஜ் போறதா இல்லை என்று சொல்ல அதைக் கேட்டு எல்லோரும் அதிர்ச்சி அடைகின்றனர்.
ராமமூர்த்தி, அமிர்தா ஆகியோர் சமாதானம் செய்ய முயற்சி செய்தும் பாக்யா தன்னுடைய முடிவில் உறுதியாக இருக்கிறார். இதைத் தொடர்ந்து எழில் பாக்கியாவை ஒரு ரெஸ்டாரன்ட்க்கு கூட்டிச் சென்று பழனிச்சாமியையும் அங்கு வரவைத்து பழனிசாமி மூலம் பாக்கியாவின் மனதை மாற்ற முயற்சி செய்கிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
மொத்தமாக கதை ஏதும் இல்லாமல் சித்தா பட பிரமோஷன், இது அது என காட்சிகளை நகர்த்தி உருட்டி உள்ளார் இயக்குனர் என பலரும் கிண்டல் அடித்து வருகின்றனர்.
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…