Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பாக்கியாவை திட்டிய கோபி.. கடைசியில் காத்திருந்த ஷாக். இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்

Baakiyalakshmi Episode Update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் கோபி, ராதிகா சொன்ன பைலை எடுத்துக் கொண்டு கேன்டீன் வாசலில் வந்து நின்று ராதிகாவுக்கு போன் செய்ய நீங்க அங்கேயே இருங்க நான் வந்துடுறேன் என்று ராதிகா ஃபோனை வைக்கிறார்.

பிறகு கோபி உள்ளே வர அங்கு பாக்கியா மற்றும் பழனிச்சாமி இருவரும் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து இங்கேயும் சந்தித்து பேச ஆரம்பிச்சிட்டீங்களா? அவன் தான் ஆம்பள வெட்கமில்லை இவளுக்கு எங்க போச்சு அறிவு என்று பாக்கியாவை திட்டி புலம்புகிறார்.

பாக்கியா கேன்டீன் கையை விட்டு போயிடுச்சு என்று கலங்கி நிற்க பழனிச்சாமி ஒருமுறை கோடீஸ்வரன் சார் கிட்ட பேசி பாருங்க, இன்னொரு வாய்ப்பு கிடைச்சா சந்தோசம் கிடைக்கலன்னா அதைவிட சந்தோஷம்னு போக வேண்டியதுதான் என்று ஊக்கமளிக்க பாக்கியா அவரிடம் பேச முடிவெடுக்கிறார்.

மறுபக்கம் ராதிகா கோபியிடம் கேன்டினில் நடந்த விஷயத்தை சொல்லி கேன்டீன் பாக்யா கையை விட்டு போயிடுச்சு என்று சொல்ல கோபி சந்தோஷப்படுகிறார். அதன் பிறகு பாக்யா கோடீஸ்வரன் சாரிடம் பேச வர கோபியை பார்த்து அதிர்ச்சி அடைந்து நிற்க பழனிச்சாமி நீங்க போய் பேசுங்க மேடம் என அனுப்பி வைக்கிறார்.

உடனே ராதிகா நான் போய் எப்படியாவது தடுத்து இந்த கேண்டின் திரும்பவும் அவங்களுக்கு கிடைக்காமல் செய்கிறேன் என்று சொல்லி கிளம்ப கோபி போ போ, கண்டிப்பா அவளுக்கு கிடைக்கவே கூடாது என்று சொல்லி அனுப்புகிறார்.

அதனை தொடர்ந்து பாக்கியா கோடீஸ்வரனை சந்தித்து பேச ராதிகா அதெல்லாம் மன்னிக்க முடியாது என்று கோபப்பட்டுக் கொண்டே இருக்க கோடீஸ்வரன் சார் கொஞ்ச நேரம் அமைதியா இருங்க என்று ராதிகாவை ஆப் செய்துவிட்டு பாக்யா பேசுவதை கேட்டு தவறு நடப்பது சகஜம் தான். இந்த ஒரே முறை மட்டும் உங்கள மன்னிக்கிறேன் திரும்பவும் இந்த மாதிரி தப்பு நடக்கக்கூடாது என்று வார்னிங் செய்து வாய்ப்பு கொடுக்கிறார். இதனால் பாக்கியா மற்றும் செல்வி இருவரும் கண்கலங்கி நன்றி கூறுகின்றனர்.

அதை தொடர்ந்து பாக்கியா தன்னுடைய குழுவில் இருப்பவர்களுக்கு அறிவுரை சொல்லி பேசி முடித்துவிட்டு செல்வியிடம் உன்கிட்ட எத்தனை முறை சொல்லிட்டு போனேன் என்ன ஆச்சு என்று கேள்வி கேட்க புருஷன் குடிச்சிட்டு புள்ளைய அடிச்சுட்டான் என்று சொல்லி அழ பாக்கியா சரி என்று ஆறுதல் கூறுகிறார்.

வீட்டில் கோபி ராதிகா நல்ல செய்தியோட வருவா என்று ஆவலோடு காத்திருக்க ராதிகா வந்ததும் என்னாச்சு அந்த பாக்கியா நடுத்தெருவுக்கு வந்துட்டாளா என்று ஆர்வமாக கேட்க நாம நெனச்சது எதுவும் நடக்கல என்று ராதிகா சொல்லி அதிர்ச்சி கொடுக்கிறார். கோடீஸ்வரன் சார் கிட்ட பேசி மன்னிப்பு கேட்டு இன்னொரு வாய்ப்பு கொடுக்க வச்சிட்டாங்க என்று சொல்ல கோபி ஆவேசப்படுகிறார்.

ஏற்கனவே ஒரு இடத்தில சமையலில் சொதப்பி வச்சிருக்கா, அப்படின்னா என்ன அர்த்தம் அவ தடுமாற தொடங்கிட்டா கண்டிப்பா ஒரு நாள் சரிஞ்சு மொத்தமா கீழ விழ தான் போறா.. அதை நாம் எல்லோரும் பார்க்க தான் போறோம் என்று கோபி சொல்ல ராதிகாவும் அவருடைய அம்மாவும் சந்தோஷப்படுகின்றனர். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Baakiyalakshmi Episode Update
Baakiyalakshmi Episode Update