தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் ஈஸ்வரி நிலா பாப்பாவிடம் நீ பாட்டி பாட்டினு பேசிட்டு திடீர்னு ஒரு நாள் கிளம்பி போயிட்டா ரொம்ப சங்கடமா இருக்கும் நீ உங்க அம்மாவோட மேல போ என்று அமிர்தாவை தூக்கி போக சொல்ல அமிர்தா வருத்தப்பட்டு மேலே செல்கிறார்.
பிறகு எழிலும் பாக்கியாவும் ஈஸ்வரியிடம் வந்து ஏன் இப்படி பேசுறீங்க அமிர்தா கஷ்டப்படுவாளே என்று சொல்ல எனக்கு மட்டும் கஷ்டம் இல்லையா நானும் வருத்தத்தில் தான் சொன்னேன் என்று சொல்ல உங்களுக்கு ரொம்ப வலிக்குதுனா சொல்லுங்க பாட்டி நானும் அமிர்தாவும் தனியாக போகிடுறோம் என்று அதிர்ச்சி கொடுக்கிறார்.
எதுக்கு ஒருத்தர் ஒருத்தர் கஷ்டப்பட்டு இருக்கணும் சொல்லுங்க நீங்க எதுவாக இருந்தாலும் சொல்லுங்க நாங்க எப்போவா இருந்தாலும் தயாராகத்தான் இருக்கிறோம் என்று எழில் கிளம்பிச் செல்ல ஈஸ்வரி என்ன இப்படி எல்லாம் பேசுறான் என்று கோபப்பட பாக்யா அவன் வருத்தத்துல பேசிட்டு போறான் என்று கூறுகிறார்.
அதனைத் தொடர்ந்து மொட்டை மாடியில் செழியன் தனியாக உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்க கோபி அங்கு வந்ததும் பாட்டிலை மறைக்க பக்கத்தில் உட்காரும் கோபி என்ன மறைக்கிற எடு வெளியே என்று சொல்லி இவ்வளவு தான் இருக்கா என்று கேட்க செழியன் வேறொரு பாட்டிலை எடுத்து கொடுக்கிறான்.
இருவரும் சேர்ந்து குடித்துக் கொண்டிருக்க அந்த பக்கம் எழில் வர கோபி பயந்து பாட்டிலை மறைக்க செழியன் எழிலை கூப்பிட்டு உட்கார வைத்து குடிக்கிறியா என்று கேட்க அவரும் ஓகே என்று சொல்ல இன்னொரு பாட்டலை எடுத்துக் கொடுக்க மூன்று பேரும் ஒன்றாக உட்கார்ந்து குடிக்கின்றனர்.
கோபி இந்த பொண்ணுங்களால் தான் நம்ம வாழ்க்கையே பிரச்சினையா இருக்கு என்று புலம்ப எழில் அன்னைக்கு கணேஷ் வந்தபோது நீங்க எனக்கு சப்போர்ட்டா பேசுனதுக்கு ரொம்ப தேங்க்ஸ் என்று சொல்கிறார். நான் இந்த குடும்பத்துக்காக எப்பவும் வந்து நிற்பேன் என்று கோபி சொல்ல நான் எனக்கு பேசினதுக்கு தான் நன்றி சொன்னேன் அம்மாவுக்கு நீங்க செஞ்ச துரோகத்தை நான் மறக்க மாட்டேன் என அதிர்ச்சி கொடுக்கிறார்.
இப்படி மூணு பேரும் ஒன்றாக உட்கார்ந்து குடித்துக் கொண்டிருக்க ராதிகா வர மூவரும் பாட்டிலில் மறைக்க பின்னாடி பாக்கியாவும் வந்து விட கோபி பயந்து போகிறார். ஒன்னும் இல்லம்மா நீ போ நாங்க வந்துடறோம் என எழிலும் செழியனும் பாக்யாவை சமாளிக்க பாக்கியா ஏதோ எட்டிப் பார்க்க பாட்டில் இருப்பதை பார்த்து விடுகிறார்.
கோபி செழியனை சிக்க வைக்க செழியன் எழில் ஒன்றும் பண்ணல நான் தான் அவனை கூப்பிட்டு உட்கார வைத்தேன் என சிக்க வைக்க பாக்கியா, எழில் மற்றும் செழியனை இழுத்துச் செல்கிறார். கோபி ராதிகாவுடன் ஒரே டென்ஷன் என்று புலம்ப என்ன டென்ஷன் என்று கேட்க ஆபீஸை மூடிட்டு வேற எங்கயாச்சும் வேலைக்கு போகலாம்னு இருக்கேன் என்று சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைந்து கோபியை திட்டுகிறார்.
ஒரு மாதம் நான் என் ஆபீசுக்கு லீவு போட்டுட்டு உங்க ஆபீஸ்க்கு வரேன் உங்களுக்கு சப்போர்ட் பண்றேன் என்று சொல்ல கோபி இன்னும் அதிர்ச்சியடைகிறார். வேணாம் வேணாம் என் பிரச்சனையை நானே பார்த்துக்கொள்கிறேன் என்று சமாளிக்கிறார். பிறகு ராதிகா கீழே கூப்பிட கோபி பாட்டிலை பார்க்க என்ன திரும்பவும் உட்கார்ந்து குடிக்கணுமா என்று கோபப்படுகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இது…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
மாப்ள சம்பா அரிசியில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ரவி மோகன். இவர் தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் கார்த்தி இவரது நடிப்பில் 2022 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்…
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். சின்னத்திரையின் மூலம் தனது நடிப்பை ஆரம்பித்த இவர் அதனைத்…