ரோகினிக்கு பதிலடி கொடுத்த மீனா. கோபத்தில் விஜயா. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் எல்லோரும் முத்து பக்கம் பழியை திருப்பிவிட அண்ணாமலை நீ செய்யற நல்லது கெட்டதெல்லாம் கோவத்துல வெளியே தெரியாம போயிடுது முதல்ல கோபத்தை அடக்கு என்ன பேசுறோம் என்பதை யோசிச்சு பேசி என திட்டுகிறார். இனிமேல் நீ மனோஜ் பத்தி தரக்குறைவா எதுவும் பேசக்கூடாது என கண்டிஷன் போடுகிறார்.

அதன் பிறகு ரோகிணி ரூமுக்கு செல்ல மனோஜ் காலடியில் விழுந்து மன்னிப்பு கேட்க ரோகிணி சமாதானமாகி இனிமே இப்படி பண்ணாத உன் மேல வச்சிருக்க நம்பிக்கையை உடைக்காத என கூறுகிறார். திரும்பவும் இந்த மாதிரி நடந்தால் நான் ஒரேடியா போய்டுவேன் என்று சொல்ல நான் உன்கிட்ட சொல்லலாம் தான் இருந்தேன் அம்மா தான் சொல்ல வேண்டாம்னு தடுத்துட்டாங்க என்று விஜயாவை கோர்த்து விட இது எல்லாம் ஒட்டு கேட்டிருந்த விஜயா ரூமுக்குள் ஓடி வந்து நான் உன் மனசு கஷ்டப்படக்கூடாது என்று தான் அப்படி சொன்னேன் என கூறுகிறார்.

அடுத்ததாக மறுநாள் காலையில் மனோஜ் இன்டர்வியூ கிளம்ப ரோகிணி மேட்ச் ஆன டிரஸ் எடுத்துக் கொடுத்து அனுப்பி வைக்கிறார். வெளியில் வந்ததும் முத்து இன்டர்வியூ போய் பாரு வேலை கிடைத்தால் சரி கிடைக்கலனா செட்டுக்கு வந்துடு ஒரு ரெண்டு கார் இருக்கு எடுத்து ஓட்டு மாதம் 30,000 கிடைக்கும் என்று சொல்ல ரோகிணி அவர் எதுக்கு கார் ஓட்டணும் உங்கள மாதிரி படிக்காதவரா என்று சொல்ல மீனா குறுக்கே வந்து கார் ஓட்டுவது ஒன்னும் கௌரவம் இல்லாத வேலை கிடையாது அவர் ஒன்னும் வேலை இல்லன்னு பார்க்கல படுத்து தூங்கலையே என மனோஜை இழுத்து விட்டு அவமானப்படுத்துகிறார்.

மனோஜ் படிச்ச படிப்புக்கு பெரிய வேலை கிடைக்கும் அவனை தேடி வந்து வேலை கொடுப்பாங்க என்று சொல்ல முத்து இவ்வளவு நாளா அட்ரஸ் தெரியாம இருந்ததா இல்ல டிகிரி முடிக்காமல் இருந்தானா என்று பதிலடி கொடுக்கிறார் முத்து. பிறகு அண்ணாமலை வந்து விட்டதும் அவரிடம் பஞ்சாயத்து வைக்க மீனா சொல்றது சரிதான் எந்த வேலையும் கௌரவம் குறைச்சல் கிடையாது என்று சொல்லி மனோஜை நல்ல வேலை தேடிக்க சொல்லி அனுப்பி வைக்கிறார்.

பிறகு முத்துவும் சாப்பிட்டு கிளம்பிய பிறகு விஜயா மீனாவை கூப்பிட்டு அவ்வளவு பேசுறான் அடக்கி வைக்க மாட்டியா என்று சொல்ல நான் இந்த வீட்டுக்கு புதுசா வந்த பொண்ணு இவ்வளவு நாளா நீங்க அதை பண்ணியிருக்கலாமே என்று பதிலடி கொடுக்கிறார். ரோகினியும் விஜயா உடன் கூட்டு சேர்ந்து கொள்ள நீங்க எதுக்கு குறுக்க வந்தீங்க என்று கேட்க முதல்ல குறுக்க வந்தது நீங்கதான். எந்த வேலையும் குறைச்சல் கிடையாது ஆனால் நீங்கள் டிரைவர் வேலையை பத்தி தப்பா பேசியதால் தான் நான் வந்தேன் என மீனா பதிலடி கொடுக்கிறார்.

மேலும் விஜயா பூக்கடை வைத்திருப்பது பற்றி தப்பா பேச அது என்னுடைய மரியாதையை காப்பாற்றுவதற்காகவும் நான் என்னுடைய சொந்த கால்ல நிக்கணும்னு என் புருஷன் வச்சு கொடுத்தது என பதிலடி கொடுத்துவிட்டு எனக்கு கடையில வேலை இருக்கு என கிளம்பி செல்கிறார் மீனா. முத்து கொடுக்கிற இடத்துல இவ ரொம்ப ஆடுறா, இதுக்கு ஒரு முடிவு கட்டுறேன் என விஜயா பதிலடி கொடுக்கிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka aasai serial episode update
jothika lakshu

Recent Posts

Konji Konji Lyrical Video

Konji Konji Lyrical Video from Raja's Playlist | Yuvan Shankar Raja | U1 Records

1 hour ago

Kai Valavi Kulunga Lyrical Video

Kai Valavi Kulunga Lyrical Video | Mandaadi | Soori | Suhas | GV Prakash |…

1 hour ago

பாரத ரத்னா எம்.எஸ். சுப்புலட்சுமியின் பயோபிக்கில் ராஷ்மிகா மந்தனா?

இந்திய கர்நாடக இசையின் புகழ்பெற்ற ஆளுமையும், பாரத ரத்னா விருது பெற்ற முதல் இசைக்கலைஞருமான எம்.எஸ். சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு…

3 hours ago

எதிர்பார்த்த படங்கள் தோற்கும்; எதிர்பாராத படங்கள் வெல்லும்! – நயன்தாரா

யாஷ், நயன்தாரா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்ஸிக்’ திரைப்படம், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியான நிலையில்,…

3 hours ago

பணம், புகழை துரத்துவது வாழ்க்கை அல்ல – நிவேதா பெத்துராஜின் உருக்கமான பதிவு

நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…

4 hours ago

ஹீரோவாக சூரி உயர 25 ஆண்டுகள் ஆகியிருக்கிறது! – மண்டாடி விழாவில் ஆர்.ஜே. பாலாஜி புகழாரம்!

நடிகர் சூரி கதாநாயகனாக நடித்து வரும் புதிய திரைப்படம் ‘மண்டாடி’. மதிமாறன் புகழேந்தி இயக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக…

4 hours ago