Life Isn’t About Chasing Money or Fame – Nivetha Pethuraj’s Emotional Post
நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் அந்நாட்டு மக்கள் மட்டுமின்றி, அங்கு சுற்றுலா சென்றிருந்த பல்வேறு வெளிநாட்டுப் பயணிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், நடிகை நிவேதா பெத்துராஜ் தனது நண்பர்கள் மற்றும் தனக்கு தெரிந்த சிலர் நேபாளத்தில் சிக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அவர்களை பாதுகாப்பாக மீட்க உதவுமாறும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனிடையே, வாழ்க்கையின் நிலையற்ற தன்மை குறித்து நிவேதா பெத்துராஜ் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், “வாழ்க்கை என்பது பணத்தைத் துரத்துவதோ, புகழைத் தேடுவதோ அல்லது மற்றவர்களின் அங்கீகாரத்திற்காக அலைவதோ அல்ல. ஒரே ஒரு நொடியில் இவை அனைத்துமே நம்மை விட்டு போய்விடும். ஒரு ஆழ்ந்த மூச்சை எடுங்கள். உங்கள் வேகத்தை குறைத்து, உங்களுக்குள் சொல்லப்படுவதை கூர்ந்து கவனியுங்கள். உங்களுக்குக் கிடைத்திருக்கும் இந்த வாழ்க்கையை நேசித்து மதியுங்கள். உங்கள் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக மாற்றுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
நேபாள வெள்ளப் பாதிப்புகளுக்கு மத்தியில் நிவேதா பெத்துராஜின் இந்த உருக்கமான பதிவு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…