தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக வலம் வருபவர் அட்லி. பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் உதவி இயக்குனரான இவர் ராஜா ராணி என்ற படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.
இந்த படத்திற்கு அடுத்ததாக தளபதி விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கும் வாய்ப்பைப் பெற்றார். என்னதான் அட்லி மற்ற படங்களைப் பார்த்து காப்பி அடிக்கிறார் என்று குற்றச்சாட்டுக்கள் இருந்து வந்தாலும் இவர் இயக்கிய படங்கள் அனைத்துமே வெற்றி கண்டன.
இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் ஷாருக்கானை வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தற்போது அட்லி இந்த படத்தின் கதையை முழுமையாக ஷாருக்கானிடம் கூறி விட்டதாகவும் அடுத்த வருட பாதியில் படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க உள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.
அதுமட்டுமல்லாமல் இந்த படம் பற்றிய ஒரு சில சீக்ரெட் தகவல்களும் கசிந்துள்ளது. அதாவது ஷாருக்கான் இப்படத்தில் அண்டர் கவர் போலீசாக நடிக்க உள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
மேலும் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு வருகிறது. ஷாருக்கான் படத்தை இயக்கி முடித்த பிறகு தளபதி விஜய்யை வைத்து அட்லி மீண்டும் ஒரு படத்தை இயக்குவார் என கூறப்படுகிறது.
Machakalli Lyrical Video | Renigunta 2 | Johnny | Shali Nivekas | Manu Ravichandran
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. திரைத்துறையில் தொடர்ந்து பிஸியாக இருந்தாலும், சமூக…
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘பத்தா’ திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது…
சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் அக்டோபர் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக…
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. இந்நிலையில், இப்படத்தைப்…
தமிழ் சினிமாவில் நடிகர் சத்யராஜின் மகனான சிபிராஜ், ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். தொடர்ந்து வித்தியாசமான…