Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் குறித்து அதுல்யா ரவி என்ன சொல்லி இருக்கிறார் பாருங்கள்.. வைரலாகும் தகவல்

athulya-ravi-talk-about-vijay

தமிழ் சினிமாவில் நாடோடிகள் 2, முருங்கைக்காய் சிப்ஸ், கேப்மாரி போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர்தான் நடிகை அதுல்யா ரவி. இவரது நடிப்பில் தற்போது தயாராகி இருக்கும் படம் தான் “எண்ணி துணிக” இதில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

இவர் சமீபத்தில் எடுக்கப்பட்ட பேட்டியில் தளபதி விஜய் குறித்து பேசியுள்ளார். அதாவது அவர் நான் விஜயின் தீவிரமான ரசிகை. இப்போ வரைக்கும் ஒரு நைட் ஃபுல்லா அவரது பழைய படங்களில் இருந்து இப்போதைய படம் வரை உள்ள பாடல்களை நான் பார்த்து ரசிப்பேன்.

என்னிடம் என் நண்பர்கள் எல்லாம் கேட்பார்கள் இப்படி பழைய பாடல்களைப் பாக்குறியே உனக்கு போரடிக்கலையான்னு. ஆனால் அது எனக்கு போர் அடிக்காது சமீபத்தில் ஏற்பட்ட கொரோனா காலகட்டத்தில் கூட தினமும் இரவு அதைத்தான் பார்ப்பேன் அவரது நடனம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

அதனால் அவரது பிறந்தநாளுக்கு நான் சூப்பராக நடனம் ஆடி அந்த நடன வீடியோவை அவருக்கு சமர்ப்பிக்க ஆசைபடுகிறேன்” என அதுல்யா ரவி பேசியுள்ளார். அவர் இவ்வாறு பேசிய இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

 athulya-ravi-talk-about-vijay

athulya-ravi-talk-about-vijay