சிவகார்த்திகேயன் குறித்து நெகிழ்ச்சியாக பேசி உள்ளார் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் அல்ல வரவேற்பையும் சமூக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
தற்போதைய முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படம் செப்டம்பர் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது இந்த படத்தின் இயக்குனரான ஏ.ஆர் முருகதாஸ் இடம் சிவகார்த்திகேயன் குறித்து கேட்டபோது அதற்கு அவர் நெகிழ்ச்சியாக சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.
அதாவது மான் கராத்தே படத்தின் போது தொலைக்காட்சியில் இருந்து வந்த நடிகராக சிவகார்த்திகேயனை பார்த்தேன் எந்த ஒரு பேக்ரவுண்டும் இல்லாமல் சினிமாவில் சாதிக்க வேண்டும் என பல நடிகர்களுக்கு அவர் ஒரு உத்வேகமாக மாறி உள்ளார் திறமையும் கடின உழைப்பும் இருந்தால் போதும் ஜெயிச்சிடலாம் என்பதற்கு சிவகார்த்திகேயன் ஒரு நம்பிக்கை சிவகார்த்திகேயனின் இந்த மிகப்பெரிய வளர்ச்சிக்காக நான் மகிழ்ச்சி அடைகிறேன் என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


