Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இளையராஜாவுக்கு மீண்டும் ஒரு மகுடம்.. பத்மபாணி விருதுக்கு சொந்தக்காரராகும் இசைஞானி..!

Another crown for Ilayaraja.. The musician who is the recipient of the Padmapani Award..!

இளையராஜாவுக்கு மீண்டும் ஒரு மகுடம்.. பத்மபாணி விருதுக்கு சொந்தக்காரராகும் இசைஞானி..!

இசைஞானி இளையராஜா லண்டனில் ‘சிம்பொனி’ இசைச்தொகுப்பை அரங்கேற்றி இசையுலக கவனத்தை ஈர்த்தார்.

இந்நிலையில் அஜந்தா-எல்லோரா சர்வதேச திரைப்பட விழா, ஒவ்வொரு ஆண்டும் மகாராஷ்டிரா மாநிலம் சத்ரபதி சம்பாஜி நகரில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் 11-வது பட விழா, ஜனவரி 28-ந்தேதி முதல் பிப்ரவரி 4-ந்தேதி வரை நடை​பெற உள்​ளது.

8 நாட்​கள் நடை​பெறும் இப்பட விழா​வில் சுமார் 70 திரைப் படங்​கள் திரை​யிடப்​படு​கின்​றன. இவ்​விழா​வில் இசைஞானி இளையராஜாவுக்கு ‘பத்ம​பாணி’ விருது வழங்​கப்பட இருக்​கிறது. இதை விழா ஏற்​பாட்​டாளர்​கள் அறிக்கை மூலம் தெரி​வித்​துள்​ளனர்.

இந்​திய மற்​றும் சர்​வ​தேச கலைஞர்​கள், பல்வேறு துறை​களைச் சேர்ந்த முக்​கிய பிரமுகர்​கள், திரைப்பட ஆர்வலர்கள் முன்னிலை​யில், ஜனவரி 28-ந்தேதி அன்று மாலை​யில் நடை​பெறும் விழா​வின் தொடக்க நிகழ்ச்​சி​யில் இவ்​விருது இளையராஜாவுக்கு வழங்​கப்பட இருக்கிறது.

திரைப்பட விமர்​சகர் லத்​திகா பட்​கோங்​கர் (தலை​வர்), திரைப்​பட இயக்குநர்​களான அசுதோஷ் கோவாரிக்​கர், சுனில் சுக்​தங்​கர், சந்​திர​காந்த் குல்​கர்னி ஆகியோர் அடங்கிய குழுவினர் இளை​ய​ராஜாவை, இந்த விருதுக்​குத் தேர்ந்​தெடுத்​துள்​ளனர்.

அவ்வகையில் அவருக்கு, பத்​ம​பாணி நினை​வுச் சின்​னம், பாராட்​டுப் பத்​திரம், ரூ.2 லட்​சம் ரொக்​கப் பரிசு வழங்கப்படும். இதற்கு முன்​னர் இந்த விருதைப் பாடலாசிரியர் ஜாவேத் அக்​தர், மூத்த இயக்குநர் ​- எழுத்தாளர் சாய் பரஞ்ச்​பே, நடிகர் ஓம் பூரி ஆகியோர் பெற்றுள்​ளனர்​. விருதுகள் கலைஞர்களுக்கு அளிக்கப்படும் ஊக்கம்தானே.!

Another crown for Ilayaraja.. The musician who is the recipient of the Padmapani Award..!
Another crown for Ilayaraja.. The musician who is the recipient of the Padmapani Award..!