தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த படத்தின் இரண்டாம் பாகமான ஜெயிலர் 2 படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
நெல்சன் திலிப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இது மட்டுமில்லாமல் அனிருத் இசையில் உருவாகும் இந்த படத்தில் எஸ் ஜே சூர்யா ரம்யா கிருஷ்ணன் யோகி பாபு மிர்னா மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.
இந்த நிலையில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள யோகி பாபு இந்த படம் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளார். அதாவது படம் ரொம்ப நல்லா வந்திருக்கு நெல்சன் இரண்டாம் பாகத்தில் என் உடன் வித்தியாசமாக நடித்தார் என்றும் தலைவருடன் சேர்ந்து படத்தில் ஒரு பெரிய அமைப்பு இருக்கிறது என்றும் கூறியுள்ளார் இது மட்டுமில்லாமல் இது பார்வையாளர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் ஜெயிலர் 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளார் இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


