அரசு பள்ளிக்கு உதவிய நடிகர் விஷால்.வைரலாகும் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். நடிகராக மட்டுமல்லாது தேவி அறக்கட்டளையின் மூலமாக தொடர்ந்து மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார்.

இந்த நிலையில் ஆகஸ்ட் மாதம் நடிகர் விஷால் அவர்களின் பிறந்த நாள் தமிழகம் முழுவதும் உள்ள மாவட்ட வாரியாக ஒன்றியம், நகரம் பகுதி மற்றும் மற்ற மாநிலங்களான பாண்டிச்சேரி,ஆந்திரா, தெலுங்கானா,கர்நாடகா, கேரளா மற்றும் மும்பை ஆகிய இடங்களிலும் உள்ள மக்கள் நல இயக்கத்தின் பொறுப்பாளர்கள் நடிகர் விஷால் அவர்களின் பிறந்த நாள் நிகழ்ச்சியாக ஆதரவற்ற முதியோர்கள், குழந்தைகள் இல்லம், மாணவ, மாணவியர்கள் மற்றும் மக்களுக்கு பயன்பெறும் வகையில் நலத்திட்ட, நற்பணி விழாக்களை ஏற்பாடு செய்து நடத்தினார்கள்.

அதன் அடிப்படையில் மத்திய சென்னை மாவட்டம் புரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் சார்பில் சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள அரசு A.I.W.C உயர்நிலை பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர்களுக்கு நல திட்ட நற்பணி விழா நடைபெற்ற போது. அப்பள்ளியின் நிர்வாகத்தின் கோரிக்கையாக நடிகர் விஷால் அவர்களுக்கு பள்ளி மாணவ, மாணவியர்கள் தொலைநோக்கு பாடத்திட்டங்களை கற்பதற்கு தொலைக்காட்சி (Android TV) தேவைப்படுகிறது. ஏற்கனவே எங்கள் பள்ளியில் செயல் பட்டு வந்த தொலைக்காட்சி (Android TV) திருடப்பட்ட நிலையில் அருகில் உள்ள காவல் துறையில் புகார் அளித்தும் எந்த பயனும் இல்லை, அரசு தரப்பிலும் எந்த பொறுப்பும் இல்லை, எனவே உங்களுடைய தேவி அறக்கட்டளை சார்பில் தொலைக்காட்சி (Android TV) வேண்டி கோரிக்கை வைக்கப்பட்ட நிலையில் அக்கோரிக்கை நடிகர் விஷால் அவர்களின் பார்வைக்கு கொண்டு சென்று உடனே நடிகர் விஷால் அவர்கள் அப்பள்ளிக்கு பெரிய தொலைக்காட்சி (Android TV) வழங்கியுள்ளார்.

பள்ளி நிர்வாகத்தின் கோரிக்கையை நிறைவேற்றிய நடிகர் விஷால் அவர்களுக்கு ஆசிரியர் பெருமக்கள், பள்ளி மாணவ, மாணவியர்கள் வாழ்த்து தெரிவிப்பதுடன்,நடிகர் விஷால் அவர்களுக்கு அப்பள்ளி மாணவ, மாணவியர்கள் அவர்களால் தயாரிக்கப்பட்ட கை வண்ண பொருட்களை வழங்கியதை பெற்றுக்கொண்ட நடிகர் விஷால் அவர்கள் மாணவ, மாணவியர்களுக்கு வாழ்த்து தெரிவித்து காணொலி பதிவு அனுப்பியும் உள்ளார்.

actor vishal-help-to-government-school-in-chennai
jothika lakshu

Recent Posts

தமிழக வெற்றி கழகம் பற்றி கேட்ட கேள்வி.. திவ்யா சத்யராஜ் கொடுத்த பதில்..!

தமிழக வெற்றிக்கழகத்தால் எங்களுக்கு எந்த பாதிப்பும் கிடையாது நாங்கள்தான் ஜெயிப்போம் என்று கூறியுள்ளார் திவ்யா சத்தியராஜ். தமிழ் சினிமாவில் நடிகராக…

18 hours ago

தயாரிப்பாளரான அஜித் குமார்.. வெளியான லேட்டஸ்ட் தகவல்..!

அஜித் குமார் ஒரு புதிய முயற்சி எடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார்…

18 hours ago

விஜய்க்கும் பவர் ஸ்டாருக்கும் தான் போட்டியே.. புதிய கட்சி தொடங்கப் போகும் பவர் ஸ்டார்..!

விஜய்க்கு எதிராக கட்சி ஆரம்பிக்க போவதாக பவர்ஸ்டார் அறிவித்து உள்ளார். தமிழ் சினிமாவில் ஹீரோவாக கலக்கிய விஜய் தற்போது தமிழக…

19 hours ago

திருடு போன சீதாவின் தாலி செயின்.. முத்து மீனா எடுக்கும் முயற்சி.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதா சாமி…

23 hours ago

விஜய் குறித்து கேட்கப்பட்ட கேள்வி.. சரத்குமார் கொடுத்த பதில்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாஸ் காட்டியவர் தளபதி விஜய். இவரது இறுதி திரைப்படமான ஜனநாயகன் சென்சார் பிரச்சினை காரணமாக…

23 hours ago

சுந்தரவல்லி சொன்ன வார்த்தை,வருத்தப்பட்ட நந்தினி, மூன்று முடிச்சு சீரியல் எபிசோட் அப்டேட்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

2 days ago