actor tovino-thomas-got-asian-actor-award
மலையாள திரையுலகின் முன்னணி நடிகர் டோவினோ தாமஸ். இவர் மாயா நதி, மின்னல் முரளி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். அண்மையில் ஜூட் அந்தனி ஜோசப் இயக்கத்தில் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான ‘2018’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் டோவினோ தாமஸ் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது.
அதுமட்டுமல்லாமல் மலையாள சினிமாவில் அதிக வசூல் ஈட்டியப் படங்களின் வரிசையில் இடம்பெற்றது. மேலும் மக்களிடம் ‘இதுதான் உண்மையான கேரளா ஸ்டோரி’ என்கிற பாராட்டுக்களையும் பெற்றது. நடிகர் டோவினோ தாமஸ் சமீபத்தில் செப்டிமியஸ், சிறந்த ஆசிய திரைப்பட நடிகருக்கானப் பிரிவில் பரிந்துரைக்கப்பட்டார். இந்நிலையில், தற்போது சிறந்த ஆசிய நடிகருக்கான விருதை வென்றுள்ளார். இதனை தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள டோவினோ தாமஸ், “ஒவ்வொரு முறை விழும்போதும் மீண்டும் எழுந்து நிற்பதில் தான் கேரளாவின் சிறப்பு உள்ளது. 2018-ல் நம்மை தாக்கி பெருவெள்ளத்தால் கேரளா விழத் தொடங்கியது.
பிறகு, நாம் எத்தகைய மன உறுதி மிக்கவர்கள் என்பதை ஒட்டுமொத்த உலகத்திற்கும் காட்டினோம். 2018 படத்திற்காக சிறந்த ஆசிய நடிகர் என்ற விருது வழங்கிய செப்டிமியஸ் விருது குழுவுக்கு நன்றி. இந்த விருது கேரளாவுக்கானது” என்று பதிவிட்டுள்ளார்.
‘ரஜினி 173’ படம் திருப்தி அளிக்கும்: இயக்குநர் சிபி சக்கரவர்த்தி உறுதி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 'கூலி' படத்தில் நடித்து…
அல்லு அர்ஜுன் அட்லி இயக்கத்தில் ராஷ்மிகா ஆக்ஷன் அவதாரம் அட்லி இயக்கி வரும் படத்தின் அப்டேட்ஸ் பார்ப்போம்.. அல்லு அர்ஜுன்…
விஜய்க்கு விதித்த ரூ.1.5 கோடி அபராதம் செல்லும்: உயர் நீதிமன்றம் உத்தரவு - முழு விவரம் விஜய் நடிப்பில் ஹெச்.வினோத்…
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த 'வாரணாசி'..! ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் 'வாரணாசி' திரைப்படம் உலக அளவில்…
தனுஷ் படத்தில் இணைந்த மம்மூட்டி... 'D55' செம அப்டேட்! 'அமரன்' படம் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ராஜ்குமார் பெரியசாமி…
VALAI Official Teaser , Atharvaa, Rupa Manjari, Vani Bhojan , Jeeva Sankar , Ghibran https://youtu.be/yIUR3EpMteY?si=UCnyp_u5Jc1MSVYs